Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மதுரை இரட்டைக் கொலை: இன்ஸ்பெக்டர் கைது

Published: Thursday, July 15, 2004, 5:30 [IST]

மதுரை & சென்னை:

மதுரையில் கடந்த மாதம் இரண்டு ரவுடிகள் படு பயங்கரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் காரணமாகஇருந்த காவல்துறை ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மதுரை தெற்குவாசல் பகுதியில் கடந்த மாதம் 2 ரவுடிகள் ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டனர்.வெடிகுண்டுகளை வீசியும், அரிவாள்களால் வெட்டியும் அவர்கள் கொலை செய்யப்பட்டது மதுரையில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர், 8 பேர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.

இந் நிலையில் இந்த இரட்டைக் கொலைக்கு புதூர் காவல் நிலைய குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபுதான் திட்டம் வகுத்துக்கொடுத்ததார் என்று விசாரணையில் தெரிய வந்தது. எதிர்கோஷ்டி ரெளடிகளுக்கு ஆதரவான இந்த இன்ஸ்பெக்டர் தான்கொலைகளுக்கே முக்கியக் காரணம் என்று தெரியவந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை சுரேஷ் பாபுவை தெற்கு வாசல் போலீஸார் கைது செய்து, நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்திஉடனடியாக அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

காவல்துறை ஆய்வாளரே இரட்டைக் கொலைக்கு சதித் திட்டம் வகுத்துத் கொடுத்தது மதுரையில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

பணம் பறித்த போலீசார் கைது:

அதே போல சென்னை மெரீனா கடற்கரையில் கணவன், மனைவியை மிரட்டி ரூ. 1,500 பணத்தைப் பறித்த காவல்துறை உதவி ஆய்வாளர்உள்ளிட்ட 3 போலீஸார் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரும், இவரது மனைவியும் நேற்று மாலை மெரீனா கடற்கரைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது 3 பேர் அங்கு வந்து அவர்களை மிரட்டி பணம் கேட்டனர்.

பணம் தர மறுத்த ரவியைத் தாக்கி, அவரிடம் இருந்த ரூ. 1,500யை அவர்கள் பறித்தனர். இதைத் தடுத்த ரவியின் மனைவியையும் தாக்கினர்.இதையடுத்து கடற்கரைக்கு வந்திருந்த பொது மக்கள், இந்த 3 பேரையும் பிடித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்றனர்.
ஆவிசாரணையில் அந்த 3 பேரும் போலீஸ்காரர்கள் என்றும், அதில் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் என்றும் தெரிய வந்தது. பலமுறை இவர்கள்பலரிடம் பணம் பறித்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs