For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலை நடந்தது ஏன்? யார் இந்த சங்கரராமன்?

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சி மடத்தில் நடக்கும் மோசடிகள், தங்கக் கட்டிகள் காணாமல் போனது, இளையவருக்கு நெருக்கமானவர்கள் மடத்தில் செய்யும்முறைகேடுகள் ஆகியவை குறித்து மொட்டை பெட்டிசன்கள் போட்டதால் தான் சங்கரராமன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Sankararamanமறைந்த காஞ்சி மகா பெரியவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் சங்கரராமனின் குடும்பத்தினர். பல பரம்பரைகளாக இவர்கள் காஞ்சிமடத்தில் பணியாற்றி வந்தனர். மகா பெரியவரின் மிக நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்தார் சங்கரராமன்.

இதனால் அவரை சங்கர மடத்தின் கட்டுப்பாட்டில் வரும் வரதராஜ பெருமாள் கோவிலின் மேனேஜராக்கினார் பெரியவர். மேலும் மடத்தின்வரவு செலவுகளை கண்காணிக்கும் அதிகாரமும் தந்தார்.

பெரியவர் உயிரோடு இருந்தபோது அவருடன் பல விவகாரங்களில் இளையவராக இருந்த ஜெயந்திரர் மோதினார். அப்போதெல்லாம்ஜெயந்திரரை கண்டித்தவர் சங்கரரராமன் தான். இதனால் மகா பெரியவர் மறைந்த பிறகு சங்கரராமனுக்கு தொல்லைகள் தர ஆரம்பித்தார்ஜெயந்திரர்.

அவரை மடத்தை விட்டு விரட்டும் வேலையில் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஈடுபட்டார். ஆனால், மடத்தின் பல ரகசியங்களைஅறிந்திருந்த சங்கரராமனைை எளிதில் விரட்ட முடியவில்லை.

ஜெயேந்திரன் மிரட்டல்களுக்கு சற்றும் அஞ்சாத சங்கரராமன், மடத்தின் விதிமீறல்கள் குறித்து அவ்வப்போது ஜெயேந்திரருக்கும் கடிதம்மூலம் தெரிவிப்பது வழக்கம் என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

இந் நிலையில் மடத்தின் சார்பில் ஆன்மிகப் பயணமாக சீனா செல்ல திட்டமிட்டார் சங்கராச்சாரியார். ஆனால், இது ஆகம விதிகளுக்குஎதிரானது என்று கூறி அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சங்கரராமன். இதனால் சங்கராச்சாரியாரால் சீனா செல்லமுடியாமல் போய்விட்டது.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கர மடத்தில் துறவறம் பூண்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி ஜெயேந்திரருக்கு பொன்விழாகொண்டாடப்பட்டது. அப்போது கனகாபிஷேகம் அவருக்கு நடத்தப்பட்டது. அப்போது மடத்தில் இரு தங்கக் கட்டிகள் காணாமல் போயின.

இந்த விவகாரத்தை ஜெயந்திரர் உள்ளிட்டவர்கள் அமுக்கப் பார்ப்பதாகக் கருதிய சங்கரராமன் இது தொடர்பாக ரகசிய கடிதங்களை(மொட்டை பெட்டிசன்) பத்திரிக்கைகளுக்கு அனுப்பினார். இதே போல முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அறநிலையத்துறைஅதிகாரிகளுக்கும் அனுப்பி வந்துள்ளார்.

சங்கர கனபாடிகள் என்ற புனைப் பெயரில் அவரது கடிதங்கள் பத்திரிக்கைகளுக்கும் அதிகாரிகளுக்கும் வர ஆரம்பித்தன. அதில் மடத்தின்பல முறைகேடுகள், ரகசியங்களை புட்டுப் புட்டு வைத்து வந்தார் சங்கரராமன்.

இதே போல இளையவரின் சகோதரர் உள்ளிட்டவர்கள் மடத்தின் சொத்துக்களை முறைகேடான வழியில் சுருட்டி வருவதாகவும் அவர்ஆதாரங்களுடன் கடிதங்கள் அனுப்பினார். மேலும் சங்கராச்சாரியாரும் பல தவறுகள் செய்வதால், இளையவரை அவர் தட்டிக் கேட்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார் சங்கரராமன்.

மேலும் தனது கட்டுப்பாட்டில் உள்ள வரஜாதராஜர் கோவிலிலும் மடத்துக்கு நெருக்கமானவர்கள் முறைகேடுகளில் ஈடுபடமுயல்வதாகவும், அதைத் தடுக்க தான் மிகவும் சிரமப்பட்டு வருவதாதவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், மகா சக்தி வாய்ந்த மடம் என்பதாலும் கடந்த பா.ஜ.க. ஆட்சியில் கொடி கட்டிப் பறந்தவர் என்பதாலும் அவர் மீது குற்றம் சுமத்திவந்த கடிதங்களை அறநிலையத்துறை குப்பையில் தூக்கிப் போட்டது.

ஆனால், இக் கடிதங்களையும் மடத்தின் விவகாரங்களையும் சில இதழ்கள் தீவிரமாக விசாரித்து எழுத ஆரம்பித்தன. (இக் கொலையில்மடத்துக்கு முக்கிய தொடர்பிருப்பதாக சங்கரராமனின் குடும்பத்தினர் கூறுவதை நாமும் முன்பே சுட்டிக் காட்டியிருந்தோம்)

இந் நிலையில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி ஒரு கும்பல் சங்கரராமன் அக்ரஹார வீட்டுக்குச் சென்றுள்ளது. சங்கரராமன் கோவிலில்இருப்பதாக வீட்டினர் தகவல் சொல்லவே, அங்கு வந்த அக் கும்பல் சங்கரராமனை கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்தது.

இந்தக் கொலை கோவில் கொள்ளைக்காக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தான் விசாரணையைத் தொடங்கினர் போலீசார். ஆனால்,கோவிலில் எந்தக் கொள்ளையும் நடக்கவில்லை என்று தெரியவந்ததால், இது தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை என்பதுஉறுதியானது.

அப்போதே இந்தக் கொலைக்கும் காஞ்சி மடத்துக்கும், குறிப்பாக சங்கராச்சாரியாருக்கும் முடிச்சு போட்டு பல விவரங்கள் வெளியில்வந்தன. ஆனால், இதையெல்லாம் மூடி மறைப்பதிலேயே காவல் துறை அதிகமான ஆர்வம் காட்டியது.

இந்தக் கொலை சங்கராச்சாரியாரின் தூண்டுதலால் தான் நடந்தது என சங்கரராமனின் குடும்பத்தினர் மறைமுகமாக குற்றம் சாட்டினர்.நேரடியாக குற்றம் சாட்டினால் உயிருக்கு ஆபத்து வரும் என்று பயந்தனர்.

இதையடுத்து சங்கரராமனின் வீட்டில் நள்ளிரவுகளில் கூட நுழைந்த மடத்தின் ஆட்கள், அக் குடும்பப் பெண்களை வாய் கூசும்வார்த்தைகளால் திட்டியும் அவமானப்படுத்தியும் வந்ததாகத் தெரிகிறது. வீட்டை உடனே காலி செய்யுமாறும் எச்சரித்து வந்தனர்.

இதனால், அக் குடும்பத்தினர் ஆழ்ந்த அமைதி காக்கத் துவங்கினர்.

ஆனால், இக் கொலை தொடர்பாக காஞ்சி மடத்தின் மீது நடவடிக்கை கோரி அனைத்துக் கட்சிப் போராட்டம் நடத்த திமுக, பா.ம.கஆகியவை தயாராகி வந்தன. மேலும் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள்போராட்டம் நடத்தின.

அடுத்த வாரம் சட்டசபை கூடும்போது இந்த விவகாரத்தை முன் வைத்து பிரச்சனை கிளப்பவும் திமுக திட்டமிட்டிருந்தது.

இந் நிலையில் மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்ற பிரேம்குமார் வழக்க தோண்டித் துருவ ஆரம்பித்தார். அரசியல் நிர்பந்தங்களுக்குப்பணியாத அதிகாரியாகக் கருதப்படும் பிரேம் குமார், இக் கொலையில் காஞ்சி மடத்துக்கு உள்ள தொடர்பை நிரூபிக்கும் பல்வேறுஆதாரங்களைத் திரட்டினார்.

சங்கரராமனுக்கும், ஜெயேந்திரருக்கும் இருந்த முன் பகை, ஜெயேந்திரருக்கு சங்கரராமன் எழுதிய கடிதங்கள், அதற்கு ஜெயேந்திரர்அனுப்பிய பதில் கடிதங்கள், கொலையாளிகள் தந்த வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்களை முதல்வரின் பார்வைக்கு அவர் கொண்டுசென்றதாகவும், இதையடுத்து அவரைக் கைது செய்ய முதல்வர் உத்தரவிட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளையவர் எங்கே?

இதற்கிடையே காஞ்சி மடத்தின் இளையவரான விஜயேந்திரர் ஆந்திர மாநிலம் மகபூப் நகரில் உள்ளார். அவர் இன்று மாலை காஞ்சிபுரம் திரும்புவார் என்றுதெரிகிறது.

இவரது தம்பியும் குடும்பத்தினரும் காஞ்சி மடத்தின் சொத்துக்களை சுருட்ட முயல்வதாகவும் சங்கரராமன் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இளையவரின் தம்பியை தமிழக போலீசார் கைது செய்துவிட்டதாகவும், அவர் தந்த ஒரு தகவல் தான் சங்கராச்சாரியாரைக் கைது செய்யஉதவியதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் காஞ்சி:

இதற்கிடையே, முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பா.ஜ.கவும் மிக நெருக்கமான சங்கராச்சாரியாரா கைது செய்யப்பட்டார் என்பதை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கிறது காஞ்சி நகரம்.

கோவில் மேலாளர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக ஜெயேந்திரர் சேர்க்கப்பட்டுள்ளது அவர் மீதுநம்பிக்கை வைத்துள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தியைஅவர்களால் நம்ப முடியவில்லை.

சங்கரராமன் மனைவி பேட்டி:

சங்கராச்சாரியாரின் கைது குறித்து சங்கரராமனின் மனைவி பத்மா கூறுகையில்,

எனது கணவரைக் கொன்றவர்களுக்கு இறைவன் விரைவில் தண்டனை வழங்குவார். இதற்கு மேல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

இவரது மகன் ஆனந்த சர்மா சென்னையில் ஒரு கல்லூரியில் சமஸ்கிருதம் பயின்று வருகிறார். மகள் உமா 10ம் வகுப்பு படிக்கிறார். தந்தையை இழந்த இக்குடும்பம் வறுமையில் வாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X