அத்துமீறிய ஜெயேந்திரர்: பெண் எழுத்தாளர் புகார்

திங்கள்கிழமை, நவம்பர் 29, 2004, 5:30 [IST]
காஞ்சிபுரம்:

Horlicks Shiyamalaதன்னிடம் ஜெயேந்திரர் அத்துமீறி நடக்க முயன்றதாக பிரபல பெண் எழுத்தாளர் தந்த புகாரை போலீசார் விசாரிக்கஆரம்பித்துள்ளனர்.

மிகவும் பிரபலமான அந்தப் பெண் எழுத்தாளர் பல மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்துக்கு கண் கலங்கவந்தார். வந்தவர், ஜெயேந்திரர் தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்றதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்து மடத்திலிருந்து தான்தப்பி வந்ததாகவும் அந்தப் பெண்மணி கூறியுள்ளார்.

மேலும் அது குறித்து எஸ்.பியிடம் புகாரும் கொடுத்துள்ளார். இந்த புகாரை வாங்கிய எஸ்.பி. அதன்மீது என்ன நடவடிக்கைஎடுப்பது என்று புரியாமல் காவல்துறை தலைமைக்குத் தகவல் தர, அப்படியே அடக்கி வாசிக்கும்படி உத்தரவு வந்துள்ளது.

இதையடுத்து அந்தப் புகார் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. முறையான எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

இப்போது கொலை விவகாரமும் மடத்தின் பெண் தொடர்புகள் குறித்த விவகாரங்களும் வெடிக்க ஆரம்பித்துள்ளதால், இந்தபெண் எழுத்தாளர் தந்த புகாரும் தூசி தட்டப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பாலியல் புகார்களை விசாரிக்க பெண் போலீஸாரைக் கொண்ட தனிப் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

மடத்திலேயே விஜயேந்திரரின் தம்பி ரகு நடத்திய காம லீலைகள், சங்கராச்சாரியாருக்கு நெருக்கமான ரவிசுப்பிரமணியத்தின் குஜால் தொடர்புகள், ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்த சியாமளாவின் சங்கர மட தொடர்புகள்,

வேறு சமூக வாலிபரை காதல் மணம் புரிந்த ஒரு அக்ரஹாரப் பெண்ணை மடத்துக்கு நெருக்கமான கும்பல் தங்கள்கட்டுப்பாட்டில் வைத்து பாலியல்ரீதியில் நாசப்படுத்தியது என பல விதமான பாலியல் புகார்கள் போலீசாரிடம்அடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விஷயங்களை ஆராய ஆரம்பித்துள்ள போலீசார் செக்ஸ் புகார் கொடுத்த பெண் எழுத்தாளரிடமும்விசாரணையை நடத்தி முடித்துள்ளனர்.

இது தவிர மடத்துக்கு முக்கிய குடும்பத்துத்துப் பெண்களை வளைக்கவே ஒரு கும்பல் இயங்கி வந்ததாகவும்,அவர்கள் காஞ்சிபுரம் வந்தால் தனி கார், தனி பங்களா ஒதுக்கி கவனிப்பது, காஸ்ட்லியான பட்டுப் புடவைகளைத்தந்து வளைப்பது போன்ற செயல்களிலும் மடத்தில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த விஷயங்கள் எல்லாமே சங்கரராமனின் கடிதங்களிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மடத்தைக்கெடுக்கும் ஸ்தீரிகளின் தொடர்புகள் என்ற பெயரில் இந்த விஷயங்களை சங்கரராமன் புட்டுப்புட்டுவைத்துள்ளார்.

இந்தப் புகார்களில் உண்மை இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதால், பெண் போலீசைக் கொண்டதனிப்படையை அமைத்துள்ளது தமிழக அரசு. இந்தப் படைக்கு சென்னையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சரஸ்வதி,காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் விட்டாபாய் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். Mail this to a friend  Post your feedback  Print this page 
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST