For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆலடி அருணா கொடூரமாக கொலை

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

Aladi Aruna dead bodyமுன்னாள் திமுக அமைச்சரும், முன்னாள் எம்.பியுமான ஆலடி அருணா (வயது 70) இன்று காலை நெல்லை அருகேமர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

தனது சொந்த ஊரில் இன்று காலை வாக்கிங் சென்ற ஆலடி அருணா மற்றும் அவர் நடத்தும் கல்லூரியில்பணியாற்றும் பேராசிரியர் பொன்ராஜ் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டும்,அரிவாள்களால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்தபோது உடனிருந்த ஆலடி அருணாவின் உதவியாளர் சார்லஸ் தப்பியோடி விட்டார்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த அருணா அவரது மறைவுக்குப் பின் திமுகவில் இணைந்தார். அதிமுகவிலும்பின்னர் திமுக ஆட்சியிலும் தமிழக அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

சிறிது காலமாகவே திமுகவை விட்டு விலகியே இருந்த அருணாவுக்கு, கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவாய்ப்பு தரப்படவில்லை. இதையடுத்து கட்சித் தலைமையை விமர்சித்தார்.

இதனால் திமுகவை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆனாலும்தான் இன்னும் திமுகவில் தான் இருப்பதாக அருணா கூறி வந்தார்.

இந் நிலையில் இன்று காலை நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள புதுப்பட்டி சாலையில்ஆலடிவிளை என்ற இடத்தில் அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் கல்லூரி ஆசிரியரானபொன்ராஜும் உதவியாளர் சார்லசும் வாக்கிங் சென்றனர்.

அந்தச் சாலையில் உள்ள பெட்ரோல் அருகே மூவரும் நடந்து சென்றபோது 3 மோட்டார் சைக்களில்களில் அங்குவந்த மர்ம நபர்கள் 5 பேர் அவர்களை வழிமறித்தனர். துப்பாக்கி, அரிவாள்கள் அவர்கள் தாக்க ஆரம்பிக்க,சார்லஸ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஓட முயன்ற அருணாவையும் பொன்ராஜையும் அந்தக் கும்பல் முதலில்துப்பாக்கியால் சுட்டது.

பின்னர் இருவரையும் சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயேபலியாயினர்.

தப்பியோடி வந்த அருணாவின் உதவியாளர் சார்லசிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கொடுத்த தகவலின் பேரில் மதுரையைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்தக் கும்பல் சம்பவ இடத்தில் ஒரு செல்போனை தவறவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை வைத்து அக்கும்பலை அடையாளம் காண முயற்சி நடக்கிறது.

முன் பகை காரணமாக ஆலடி அருணா கொல்லப்பட்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.

இச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலைசெய்யப்பட்டதைப் போலவே ஆலடி அருணாவும் காலையில் வாக்கிங் சென்றபோது வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பின்னர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசியஅருணா, வைகோவை வருங்கால தமிழக முதல்வர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆலடிப்பட்டி அருணாச்சலம் எனப்படும் ஆலடி அருணா ஒரு வழக்கறிஞராவார். ஆங்கிலத்திலும் நல்ல புலமைபடைத்தவர். ஏராளமான சட்ட நூல்களை எழுதியுள்ளார்.

அவருக்கு மனைவி, நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X