வரதராஜ பெருமாள் சாட்சியாக வருவாரா?: நீதிபதி கேள்வி

திங்கள்கிழமை, ஜனவரி 24, 2005, 5:30 [IST]
சென்னை:

Radhakrishnan ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் வரதராஜப் பெருமாளும், காமாட்சி அம்மனும் அரசுத் தரப்பு சாட்சிகளாகவருவார்களா என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தணிகாச்சலம் கேள்வி எழுப்பினார்.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மீனாட்சி சுந்தரம், ஆனந்தன், லட்சுமணன், பூமிநாதன்,குமார், கண்ணன் ஆகிய 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீது இன்று விசாரணை தொடர்ந்து நடந்தது. 6 பேர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதிடுகையில்,

இந்த வழக்கில் போலீஸ் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் இந்த 6 பேரின் பெயர்களும் இடம் பெறவில்லை. பின்னர்தான் இவர்களது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இந்த தாக்குதல் வழக்கில் நேரடித் தொடர்பும் இல்லை.

எனவே இவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றார். அதற்கு அரசு வழக்கறிஞர் துரைசாமி கடும் எதிர்ப்புதெவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தணிகாச்சலம், இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக நீதியின் சக்கரம் சுழலாமல் இருந்துள்ளது. இப்போதுதிடீரென இந்த வழக்கு உயிரோட்டம் பெற்றுள்ளதை நம்ப முடியவில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக என்ன நடந்தது, விசாரணையின் போக்கு என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.

இந்த வழக்கிலும் காஞ்சி காமாட்சியும், வரதராஜ பெருமாளும் அரசு சாட்சிகளாக வருவார்கள் என்று அரசுத் தரப்புஎதிர்பார்க்கிறதா? இந்த வழக்கில் போலீஸ் நடத்திய விசாரணை திருப்தி தரும் வகையில் இல்லை என்றார் நீதிபதி.

நீதிபதியின் சரமாரிக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத அரசு வழக்கறிஞர் அமைதியாக, தடுமாறி நின்றார்.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி தணிகாச்சலம்.

சங்கரராமன் கொலை வழக்குக்கு வரதராஜப் பெருமாளே சாட்சி, இந்த வழக்கே பெருமாளுக்கும், சங்கராச்சாரியார்களுக்கும்இடையேதான் நடக்கிறது என்று இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னர் எஸ்.பி. பிரேம்குமார் வசனம்பேசியது நினைவுகூறத்தக்கது.

இந்த வசனத்தை மேற்கோள் காட்டிய திமுக தலைவர் கருணாநிதி, வரதராஜப் பெருமாள் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்வாராஎன்று கேட்டிருந்தார். மேலும் சாமிக்கும் கூட பிரேம்குமார் சம்மன் அனுப்பினாலும் ஆச்சரியமில்லை என்று கிண்டலடித்திருந்தார்.

இந்த ஆடிட்டர் வழக்கை 2 வருடங்களாக விசாரிக்காமல் பரணில் தூக்குப் போட்டுவிட்டு இப்போது அசுர வேகம் காட்டும்அரசுத் தரப்புக்கு, பிரேம்குமார் எடுத்துவிட்ட வசனத்தை சுட்டிக் காட்டி நீதிபதி சவுக்கடி தந்தார். Mail this to a friend  Post your feedback  Print this page 
IPL, Feroz Shah Kotla, Delhi
Royal Challengers Bangalore: 138 / 1, 15.1 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
West Indies: 177 / 4, 67 Overs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 6 wickets