Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காஞ்சி மடம் கோவிலே: கலவை மடம் விளக்கம்

Published: Tuesday, February 1, 2005, 5:30 [IST]

கலவை

Kanchi Muttகாஞ்சிபுரம் சங்கர மடம் ஒரு கோவில்தான் என கலவை சங்கர மடம் (ஜெயேந்திரர் தரப்பு) விளக்கம் அளித்துள்ளது.

காஞ்சி சங்கர மடம் கோவில் அல்ல, 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குட்டி காலனி அது, அங்கு படுக்கை அறை, கழிப்பறைகள்எல்லாம் உள்ளன என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெவித்திருந்தது. இதற்கு கலவை சங்கர மடம் ஆட்சேபனை தெவித்துள்ளது.

இதுதொடர்பாக கலவை மடத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

காஞ்சி மடத்தில் ஆதிசங்கரரின் சிலை இருக்கிறது. ஆறு சித்த சிஷ்யர்களின் சிலைகள் உள்ளன. இங்கு தொடர்ச்சியாக பூஜை நடத்தப்பட்டுவருகிறது. மடத்தின் இடதுபுறம் விநாயகர் சிலை உள்ளது. இந்த சிலை வைக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் எனஅப்போதைய மன்னர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு சான்றாக, விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்வதுடன், நெய் தீபம் ஏற்ற வேண்டும் என்று மன்னர் சாசனத்திலும்குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக் கோவில்களில் சமாதிகளுக்கு பூஜை நடத்துவதில்லை. பிரம்ம ஞானிகள் இறந்த இடத்தில் கோவில்கள் கட்டி இந்துக்கள் வழிபடுவதுபுதிய விஷயம் அல்ல. பழனி கோவில் கூட சித்தர் போகரின் சமாதி மீதுதான் கட்டப்பட்டுள்ளது.

சங்கர மடத்தில் ஆதிசங்கரரின் நேரடி சிஷ்யரான இரண்டாவது மடாதிபதி சுரேஷ் ஆச்சார்யாவின் சமாதி இருக்கிறது. அங்கு பூஜைகளும்,ஆராதனைகளும் நடந்து வருகின்றன. காஞ்சி மடத்தின் 68வது மடாதிபதியான சந்திரசேகரேந்திர சுவாமிகளின் சிலை இருப்பதுஎல்லோருக்கும் தெரியும். இந்த மடம் குரு, சிஷ்யர் பாரம்பரியத்தில் வந்தது.

இந்து அறநிலையத்துறையின் மூலம் கோவில்கள் மட்டும் எடுக்கப்பட்டு பராமரிப்பது வழக்கம். அப்படி இருக்க பாம்பன் சுவாமி சமாதியைஅரசு ஏன் எடுத்தது? காஞ்சி மடத்தில் யார் இருந்தாலும், இல்லையென்றாலும் பூஜைகள் நடக்கும் என்று தமிழக அரசே ஏற்கனவேதெரிவித்துள்ளது.

இதன் மூலம் அங்கு பூஜைகள் நடந்து வருவது உறுதியாகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற விளக்கம் உயர் நீதிமன்றத்திலும் கலவை மடத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.