For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேட்டி கட்டி ரவிக்கை அணிவாரா கமல்?: திருமா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Manisha and Kamal in Mumbai expressதமிழ் உணர்வாளர்களின் எச்சரிக்கையை மீறி மும்பை எக்ஸ்பிரஸ், பிஎப் ஆகிய படங்களை வெளியிட்டால் என்ன விலை கொடுத்தாவதுஅதைத் தடுப்போம் என தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மீண்டும் எச்சரித்துள்ளது.

தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பாமக தலைவர் ஜிகே மணி, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்,மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் உடனிருந்தார்.

நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:

வரும் மார்ச் 12ம் தேதி முதல் தமிழுக்கான எங்களது மூன்றாவது போராட்டத்தை நடத்த இருந்தோம். ஆனால், அதற்கு முன்னதாகவேமுதல்வர் ஜெயலலிதா எங்கள் போராட்டத்தை தொடங்கி வைத்துவிட்டார். அதற்காக அவருக்கு நன்றி.

நாங்கள் திரைத்துறையை எதிர்த்து போராடுவதாக சித்தரிப்பது வேதனையாக உள்ளது. எங்கள் வேண்டுகோளை ஏற்று கடந்த ஆண்டில் 80படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டன. ஆகவே திரைத்துறையில் 95 சதவீதம் பேர் எங்களை ஆதரிக்கின்றனர்.

இதனால் பயந்து போன ஜெயலலிதா அவர்கள் எங்களை திரைத்துறையினருக்கு எதிரானவர்கள் போல காட்டி அவர்களை எங்களுக்குஎதிராக திருப்பி விட முயல்கிறார்.

எங்கள் வேண்டுகோளை மீறி கமல்ஹாசன் அவர்கள் தனது படத்துக்கு பாதி தமிழிலும் பாதி ஆங்கிலத்திலும் பெயர் வைப்பேன் என்றுஅறிவித்துள்ளார். இது வேட்டி கட்டிக் கொண்டு ரவிக்கை போடுவது மாதிரி.

இயக்குனர் எஸ்ஜே சூர்யா மிகவும் ஆணவத்துடனும் திமிருடனும் என் விருப்பப்படி தான் பெயர் வைப்பேன், அது தவறு என்றால்பார்ப்பவர்களின் பார்வையில் தான் கோளாறு என்று திமிர்ப் பேச்சு பேசியிருக்கிறார்.

Surya and Nila in BFதமிழ் உணர்வாளர்களின் வேண்டுகோள், எச்சரிக்கையை மீறி இந்தப் படங்களை வெளியிட்டால் என்ன விலை கொடுத்தும் தடுப்போம்.எந்த சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். தமிழ் உணர்வு எங்கள் ரத்தத்தில் கலந்தது. யாரையும் மிரட்டவோ பேரம் பேசவோ இந்தப்போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை.

யாரிடமும் தம்பிடி காசு கூட நாங்கள் நன்கொடை வாங்கியதில்லை. கலாச்சார சீர்கேட்டையே எதிர்க்கிறோம்.

எஸ்ஜே சூர்யாவிடம் படம் காம வக்கிரம் பிடித்ததாக உள்ளது. கேவலமாக, அருவெருப்பாக உள்ளது. பி.எப். என்ற சொல்லேஎப்படிப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்தின் போட்டோக்கள் கூட நீலமாகத் தான் உள்ளன.

தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயலை, தமிழ் மண்ணை வேட்டைக்காடாக மாற்றும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம். பம்பாய் தான்பழைய பெயர். ஆனால், பால் தாக்கரேவுக்கு பயந்து அதை மும்பை என்று கமல் எடுத்து வருகிறார். தாக்கரேவுக்கு பயப்படும் கமல்தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மறுப்பது ஏன்?

தமிழ் உணர்வுகளையும், மரபுகளையும் பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் போலிருக்கிறது.

தமிழர்களை ஜாதியின் பெயரால் எப்படி பிரித்தாளுகிறார்கள் என்பதற்கு ஐயா படம் நல்ல உதாரணம். அந்தப் படத்தை பார்க்குமாறுஎங்கள் தொண்டர்களிடம் கூறியிருக்கிறோம். உள்ளக் கடத்தல் படத்தை நாங்கள் பார்க்க இருக்கிறோம்.

தமிழுக்காகத் தான் போராட்டமே தவிர எந்த மொழிக்கும் எதிராக அல்ல. தொன்மையான மொழி நம் மொழி. அந்தப் பெருமையைஉணர்ந்து அதைக் காக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை தொலைக்காட்சிகளுக்கும் வைத்துள்ளோம். எந்தத் தொலைக்காட்சிக்கும்நாங்கள் பயந்து ஓட மாட்டோம் என்றனர்.

சேதுராமன் அறிக்கை:

முன்னதாக சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராமதாசின் பெயரில் வட மொழி கலப்பு (தாஸ்) இருப்பதாக தமிழ் பண்டித்தியம் மிக்கவர் போல வாய் நீளம் காட்டும் ஜெயலலிதாவின்பெயரில் முன் எழுத்தான ஜெய என்பது வடமொழி தானே? அதை நீக்க ஜெயலலிதா தயாரா?

தமிழர்கள் எழுச்சி பெற்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் பின்னால் அணி திரள்வதை கண்டு அஞ்சி ஜெயலலிதா புலம்புகிறார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. அதிமுகவுடன் கூட்டு சேர ஒரு கட்சியும் தயாராக இல்லை. இதனால் சினிமாகாரர்களையாவது பிடித்துவைத்துக் கொள்வோம் என்ற சுய நல நோக்கத்துடன் தமிழ் பாதுகாப்புக்கு குரல் கொடுப்பவர்கள் சீறிப் பாய்கிறார் ஜெயலலிதா.தமிழுக்காக உயிரையும் தியாகம் செய்வோம் என்று கூறப்பட்டிருந்தது.

தமிழப் பாதுகாப்பு இயக்கதினருக்கு எச்சரிக்கை விடுத்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு நன்றி தெரிவித்து நேற்று கமல்வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக முதல்வருக்கு நன்றி எனும் வார்த்தையை தவிர வேறு எது சொன்னாலும் அது அரசியல் ஆகி விடும். எனக்குத் தமிழ் தெரிந்த அளவுகூட அரசியல் தெரியாது.

அரசியலை ஒரு கலையாகவே மாற்றும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன். ஆனால் கலையை அரசியல் ஆக்குவது ஆரோக்கியம்அல்ல என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X