Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கும்மிடிப்பூண்டி: அதிமுக வேட்பாளர் மீது வழக்கு

Published: Friday, April 29, 2005, 5:30 [IST]

திருவள்ளூர்:

அரசு சுவர்களில் விளம்பரம் செய்த கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் உட்பட 4 அதிமுக பிரமுகர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி மற்றும் காஞ்சிபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. திமுக,அதிமுக உட்பட அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

சுவர்களில் முன்னதாகவே இடம்பிடித்து தங்களது சின்னங்களை போட்டி போட்டு வரைந்து வருகின்றனர்.

இந் நிலையில் கும்மிடிப்பூண்டி மேட்டுத் தெருவிலும் பல இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் தேர்தல் சின்னங்களைவரைந்துள்ளனர். இங்குள்ள 2 தண்ணீர் தொட்டிகள் மற்றும் 7 குப்பைத் தொட்டிகளில் இரட்டை இலை சின்னங்கள்வரையப்பட்டிருந்தன.

அரசு சொத்துக்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்யக்கூடாது. இதை மீறி விளம்பரம் செய்ததால் அதிமுகவேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார், அதிமுக மாவட்ட செயலாளர் மணி, நகர செயலாளர் சேகர், நகர அவைத் தலைவர் ஓடைராஜேந்திரன் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

[an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter