For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சியில் 20 பேர், கும்மிடிப்பூண்டியில் 16 பேர் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்/கும்மிடிப்பூண்டி:

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் மொத்தம் 36 பேர் இறுதிப் போட்டியில் உள்ளனர்.இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று மாலை 3 மணிக்குப் பிறகு, இறுதிவேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

காஞ்சிபுரம் தொகுதியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் உள்பட 3 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்துஅங்கு இறுதியாக 20 பேர் களத்தில் நிற்கின்றனர்.

அந்த வேட்பாளர்கள், அவர்களது கட்சிகள், சின்னங்கள் விவரம்:

மைதிலி திருநாவுக்கரசு (அதிமுக - இரட்டை இலை)
பி.எம்.குமார் (திமுக- உதயசூயன்)
ந.இளஞ்செழியன் (ஐக்கிய ஜனதாதளம் - மோதிரம்)
சு.சிதம்பரம் (அகில பாரத இந்து சபை - தேங்காய்)
இவர்களைத் தவிர 16 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியில் நேற்று 3 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதியாகப் போட்டியிடுவோர்

எண்ணிக்கை 16 ஆக குறைந்தது. அவர்களது விவரம்:

கே.எஸ்.விஜயக்குமார் (அதிமுக- இரட்டை இலை)
வெங்கடாசலபதி (திமுக- உதயசூயன்)

மேலும் 14 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஜெ, கருணாநிதி பிரச்சாரம்:

முதல்வர் ஜெயலலிதா வரும் 3ம் தேதி இரு தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அவரைத் தொடர்ந்துதிமுக தலைவர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X