For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"குண்டர்கள்" புடை சூழ திமுக பிரசாரம்: அதிமுக புகார்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், ஆயுதம் தாங்கிய குண்டர்களை உடன் அழைத்துக் கொண்டு பிரசாரத்தில்ஈடுபடுவதாக அதிமுக புகார் கூறியுள்ளது.

இடைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அதிமுகவும், திமுகவும் சரமாரியாக விதி மீறல்களைமீறி வருவதை, இரு கட்சிகளும், தேர்தல் பார்வையாளரிடமும், ஆட்சித் தலைவர்களிடமும் கொடுத்து வரும் புகார்களைப்பார்த்துத் தெரிந்து கொள்ள முடிகிறது.

காஞ்சிபுரம் தொகுதியில், இரு கட்சிகளும் வெற்றிக் கனியைப் பறிப்பதற்காக படு மும்முரமாக உள்ளன. இதற்காக எந்தவகையான விதி மீறலிலும் ஈடுபட இரு கட்சிகளுமே தயாராக உள்ளதை அவர்கள் கூறும் புகார்களை வைத்தே அறிந்து கொள்ளமுடியும்.

இரு கட்சிகளும் கொடுத்து வரும் விதிமீறல் தொடர்பான புகார்களை எப்படி கையாளுவது என்ற குழப்பத்தில் தேர்தல்அதிகாரிகள் உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தலைமையிலான அதிமுக குழுவினர் நேற்று காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர்நந்தகுமார், தேர்தல் அதிகாரி அன்பழகன் ஆகியோரை சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் பெரியசாமி, துரைமுருகன் ஆகியோர்காஞ்சிபுரம் ஆனந்த ஜோதி தெருவில் 5 வீடுகளில் குண்டர்களைத் தங்க வைத்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் 50 பேர்தங்கியுள்ளனர். இவர்களிடம் பல வகையான ஆயுதங்களும் உள்ளன.

இந்த குண்டர்கள், திமுகவினர் பிரசாரத்திற்குச் செல்லும்போது அவர்களுடன் செல்கிறார்கள்.

இதேபோல, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மு.க.ஸ்டாலின் ஆகியோரது பிரசாரத்தின் போது, சட்டத்திற்குப் புறம்பாகமின்சாரத்தைத் திருடி, அதனைக் கொண்டு ஒளி விளக்கு அலங்காரங்களை திமுகவினர் செய்துள்ளனர்.

வாகனங்கள் சூறை:

கடந்த 8ம் தேதி அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசுவுக்கு ஆதரவாக இயக்குநர் டி.ராஜேந்தர் பிரசாரம் செய்ய வந்தார்.அவருக்குப் பின்னர் அப்பகுதிக்கு வந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நான் தான் முதலில் பிரசாரம்செய்வேன். அதற்குப்பிறகு தான் டி.ராஜேந்தர் பிரசாரம் செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினார்.

ஆனால் அதிமுகவினர் அதை ஏற்கவில்லை. ராஜேந்தர் தான் முதலில் வந்தார். அவர் தான் பிரசாரம் செய்வார் என்று கூறிவிட்டனர். பின்னர் ராஜேந்தர் பிரசாரம் செய்து விட்டு திரும்பிச் சென்றபோது, திமுகவினருடன் வந்திருந்த குண்டர்கள்அதிகவினரின் 2 வாகனங்களை அடித்து உடைத்தனர்.

இப்படி திமுகவினர் குண்டர்களின் உதவியுடன் பிரசாரம் செய்து வருவதால், இந்தத் தேர்தல் அமைதியாக நடக்குமா என்றஐயப்பாடு எழுந்துள்ளது. திமுகவினர் மீதான புகார்களுக்கு ஆதாரமாக ஏராளமான விசிடிக்கள், புகைப்படங்கள்உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளோம் என்று அன்வர்ராஜா கூறினார்.

இதற்கிடையே, திமுக தலைமைக் கழக அலுவலத்திலிருந்து வெளியான ஒரு அறிக்கையில், அதிமுகவினர் நாட்டுவெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ள ஒரு வாகனத்தில் வலம் வருகிறார்கள். இதன் மூலம் வாக்காளர்கள் வாக்களிப்பதைத் தடுக்கஅவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட காந்தி நகர், தேனம்பாக்கம், சதாவரம் ஆகியபகுதிகளில் வங்கிக் கடன் வழங்க அமைச்சர் சோமசுந்தரம் ஏற்பாடு செய்துள்ளார் என்று புகார் கூறப்பட்டுள்ளது.

இரு முக்கியக் கட்சிகளும் மாறி, மாறி விதி மீறல்களில் ஈடுபடுவதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருப்பதால், இரு கட்சிகளுமேமுறைகேடான வழியில் வெற்றியைப் பெற முயற்சிப்பதாகவே மக்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X