கும்மிடிப்பூண்டி தொகுதியில் போலி வாக்காளர்கள் யாரும் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாகூறியுள்ளார்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் நரேஷ் குப்தா, மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கச்சாமி, தேர்தல் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், கும்மிடிப்பூண்டி தொகுதியில் 20,000 போலி வாக்காளர்கள்சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புகார் தவறானது. இது சாத்தியமே இல்லாதது. வாக்காளர் பட்டியல் தீவிரப் பரிசீலனைக்குப்பிறகே இறுதி செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள 196 வாக்குச்சாவடிகளிலும் வீடியோ எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின்ஏஜென்டுகள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
தொகுதியில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்கியுள்ளனர். அனைவரும் தேர்தல் விதிமுறைப்படி, வாக்குப் பதிவுக்கு 48 மணிநேரத்திற்கு முன்பாவே வெளியேற்றப்படுவார்கள்.
ஓட்டுப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. அடையாள மை, அழிக்கவே முடியாதஅளவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே மையை அழித்து விட்டு கள்ள ஓட்டுப் போட முடியாது என்றார் நரேஷ் குப்தா.
| [an error occurred while processing this directive] | |
| [an error occurred while processing this directive] |
- ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் தொடர்புடைய முக்கிய தரகர் பிரசாந்த் கைது
- மூச்சு முட்டிடுச்சாம்: கசாப் அறையில் இருந்து சஞ்சய் தத் மாற்றம்
- ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
- நகைக்கடையில் பண மோசடி: போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது
- 'சுண்டைக் காய்' சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
- யாசின் மாலிக் பேச்சுக்கு பாஜக பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம்
- மெல்போர்ன் நகரில் ஈழ இன அழிப்பு நினைவுக் கண்காட்சி
- வேலைக்கு போக திராணியுள்ள கணவனுக்கு மனைவி ஜீவனாம்சம் தர தேவையில்லை: கோர்ட்
- எம்.பி.பி.எஸ்…. 3,200 இடங்கள், 32,000 விண்ணப்பங்கள்: ஜூன் முதல் வாரம் ரேங்க் பட்டியல்
- ஜாமீனில் வெளியே இருக்கும் ராமதாஸுக்கு இன்று ஹார்ட் ஆபரேஷன்
- Upcoming Matches
| CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla | Tue 21st May | IPL |
| RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla | Wed 22nd May | IPL |
| IRE Vs PAK - 1st ODI at Castle Avenue | Thu 23rd May | ODI |






