Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

வன்முறை பவனாகும் சத்தியமூர்த்தி பவன்: இளங்கோவன் சாடல்

Published: Saturday, July 23, 2005, 5:30 [IST]

சென்னை:

பெருமை வாய்ந்த சென்னை சத்தியமூர்த்தி பவன் (காங்கிரஸ் தலைமையகம்) சில தலைவர்களின் (வாசன் அண்ட் கோ)அலட்சியப் போக்கால் வன்முறைகள் அரங்கேறும் பவனாக மாறி வருகிறது என்று மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட விநாயகமூர்த்தி எம்.எல்.ஏ. இன்றுஇளங்கோவனை சந்தித்துப் பேசினார். அப்போது வாசன் ஆதரவாளர்களுக்கு எதிரான தனது போராட்டத்திற்குஇளங்கோவனின் ஆதரவை அவர் கோரியதாகத் தெரிகிறது.

விநாயகமூர்த்தியுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன்,

பெருந்தலைவர் காமராஜர் இருந்து பணியாற்றிய இடம் சத்தியமூர்த்தி பவன். இன்று அது வன்முறைகள் அரங்கேறும் பவனாகமாறியுள்ளது. தினந்தோறும் வன்முறைச் சம்பவங்கள் அங்கு நடந்து வருவது வேதனையைத் தருகிறது.

கட்சிக்காக உழைக்கும் மூத்த தலைவர்களே தாக்கப்படும் அவல நிலை ஏற்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது. தாக்குதலில்ஈடுபடுவோருக்கு சில தலைவர்களே ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உயிரற்றுக் கிடக்கிறது. கட்சிக்குப் புத்துயிர் ஊட்ட மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டம் நடத்தமுடிவு செய்துள்ளேன் என்றார்.

இளங்கோவைனைத் தொடர்ந்து திண்டிவனம் ராமமூர்த்தி, தங்கபாலு, பிரபு உள்ளிட்ட வாசனுக்கு எதிரான தலைவர்களையும்சந்தித்துப் பேசவுள்ளார் விநாயகமூர்த்தி.

வாசனை தலைவர் பதவியிலிருந்து தூக்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைக்கும் வாசன் எதிர்ப்புத் தலைவர்களும்,விநாயகமூர்த்தி விவகாரத்தை பெரிதாக்க முயன்று வருகின்றனர். இந்த விவகாரத்தை வைத்தே வாசனுக்கு ஆப்பு வைக்கமுயற்சித்து வருகின்றனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

[an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST