மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்க கூட்டப்பட்டுள்ள பெண்கள் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு முதல்வர்ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, பல்துறைகளைச் சேர்ந்த பெண்கள் அமைப்பினர், பெண்கள் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள்உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.கட்சி சார்பற்ற முறையில்நடத்தப்படும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு கூறி டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், தமிழக முதல்வர் ஜெயலலிதா, ராஜஸ்தான்முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மார்கரெட் ஆல்வா, ரேணுகா சவுத்ரி, ஷபானா ஆஸ்மி, காந்தி சிங், ஜெயப்பிரதா, ஹேமமாலினிஉள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மகளிர் இட ஒதுக்கீடுதொடர்பான போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போகிறோம் என்றார் நேசர்கி.
| [an error occurred while processing this directive] | |
| [an error occurred while processing this directive] |

















