Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் மேனகா காந்தி

Published: Tuesday, May 10, 2005, 5:30 [IST]

சென்னை:

தமிழர்களின் வீர விளையாட்டு என புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் எனமுன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கோரியுள்ளார்.

விலங்குகளின் பால் பெரும் ஆர்வம் கொண்ட மேனகா காந்தி முன்பு மத்திய அமைச்சராக இருந்தபோது, தெருநாய்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்து பிரபலமானார். இதனால் நாய்கள்கொல்லப்படுவது நிறுத்தப்பட்டது.

அத்தோடு சென்னை மெரீனா கடற்கரையில் நடைமுறையில் இருந்த குதிரைப் பந்தயத்தையும் தடை செய்தார்.

இந் நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் குரல் கொடுத்துள்ளார்.தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தின் பெரும்பாலானபகுதிகளில், குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் நடைபெறும்.

அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. தமிழக அரசின் சுற்றுலாத்துறை, அலங்காநல்லூர்ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண வெளிநாட்டுப் பயணிகளை அழைத்துச் செல்வது நீண்ட காலமாக நடந்துவருகிறது.

இந் நிலையில் ஜல்லிக்கட்டு, காட்டுமிராண்டித்தனமானது, அதை தடை செய்ய வேண்டும் என்று மேனகா காந்திகூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில்,

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருமுறைகடிதம் எழுதியுள்ளேன். ஆனால் இதுவரை பதில் வரவில்லை.

தமிழக அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை அணுகி வழக்குதொடருவேன் என்று மேனகா கூறியுள்ளார்.

கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு முன்பு ஜெயலலிதா தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதென் மாவட்டங்களில் ஜெயலலிதாவுக்கு பெரும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது. இதனால் ஓட்டுக்களைஇழந்தார். அதைத் தொடர்ந்து அந்தத் தடையை உடனடியாக வாபஸ் பெற்றார்.

இந் நிலையில் தமிழர்களின், குறிப்பாக தென் மாவட்ட மக்களின் விருப்ப விளையாட்டாக திகழும் ஜல்லிக்கட்டுநிகழ்ச்சிக்கு ஜெயலலிதா தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

[an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST