Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பொன்னையனுக்கு ஜெ. ஆப்பு மேல் ஆப்பு

Published: Sunday, May 7, 2006, 5:30 [IST]

சென்னை:

நிதியமைச்சர் பொன்னையன் தொடர்ந்து அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டு வருகிறார். இதுவரை வகித்து வந்த ஆட்சிமன்றக் குழுஉறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதால் வருகிற தேர்தலில் அவருக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பதேகேள்விக்குறியாகியுள்ளது.

2001ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது, ஜெயலலிதாவின் விசுவாசமான மூத்த தலைவர்களில் ஒருவராகபொன்னையன் உருவெடுத்தார். அவருக்கு கட்சியிலும், ஜெயலலிதாவின் மனதிலும் முக்கிய இடம் கிடைத்தது.

கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்ற வகையில் முக்கிய முடிவுகளை பொன்னையனுடனும் ஆலோசித்த பின்னரேஜெயலலிதா எடுத்தார்.

மேலும், அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பையும் கொடுத்து பொன்னையனைக் கெளரவப்படுத்தினார் ஜெயலலிதா.இதையெல்லாம் மன்னார்குடி ஆட்கள் பொறாமையோடு பார்த்து வந்ததோடு பொன்னையனுக்கு ஆப்பு வைக்க காத்திருந்தனர்.

இந் நிலையில் சிறுசேரி நில விவகாரம் தொடர்பாக பொன்னையன் மீது ஜெயலலிதாவுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

அரசியல்ரீதியாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தக் கூடிய சில முடிவுகளை பொன்னையன் எடுத்ததே அவரைஜெயலலிதா வெறுக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

சென்னை அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் அரசுக்குச் சொந்தமான, தொழிலகங்கள் மட்டுமே வைக்க அனுமதி உள்ளஇடத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தமிழக அரசு மிகவும் சொற்ப விலைக்கு விற்றது.

இதன் உண்மையான மதிப்பு ரூ. 200 கோடி என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் இன்னொரு டான்சியாக உருவெடுக்கும் எனஜெயலலிதா நினைக்கிறார். இந்த நில விற்பனையில் இப்போது பொன்னையனின் பெயரும் அடிபடுகிறது.

மேலும், பொன்னையனுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே உள்ள நல்லுறவால் பாதிக்கப்பட்ட சில சீனியர் அமைச்சர்களும்,மன்னார்குடியினரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுக்கடுக்காக பொன்னையன் மீது புகார் பட்டியலை முதல்வரிடம்வாசித்தார்களாம்.

இப்படி ஒட்டுமொத்தமாக அதிருப்தி குவிந்ததால் பொன்னையன் மீது ஆக்ஷனில் இறங்கினார் ஜெயலலிதா. முதலில்சட்டசபையில் அவர் பேசத் தடை விதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவைத் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.தற்போது ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், பொன்னையனுக்கு சொந்தமான தமிழ்த்தாய் கேபிள் டிவி நிறுவனத்தையும் கையகப்படுத்த ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார். முதலில் எஸ்.சி.வி, ஹாத்வே நிறுவனங்களை மட்டுமே கையகப்படுத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

ஆனால் அடுத்த நாளே மேலும் சில நிறுவனங்களின் பெயர்கள் இதில் சேர்க்கப்பட்டன. அதில் பொன்னையனின் தமிழ்த்தாய்கேபிள் டிவி நிறுவனம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னையனிடம் தற்போது உள்ள ஒரே முக்கியப் பதவி அவர் வகிக்கும் நிதியமைச்சர் பதவிதான். தேர்தல் நேரத்தில் அதைப்பறித்து பிரச்சினையை பெரிதாக்க ஜெயலலிதா விரும்பவில்லை எனத் தெரிகிறது.

ஜெயலலிதாவை விட்டு ரொம்பத் தூரம் போய் விட்ட பொன்னையனுக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்காதுஎன்கிறார்கள்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

[an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs