For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு- அதிதீவிரபாதுகாப்பு-கள்ள ஓட்டை தடுக்க வீடியோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் 51,534 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆயுதம் தாங்கியபோலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 2,586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இதில் 160 பேர் பெண்கள்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளர்களின் கையில் வைக்க பயன்படும்அடையாள மை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

கிட்டத்தட்ட 60,000 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தலில்பயன்படுத்தப்படவுள்ளன.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள போலீஸார், துணை ராணுவப்படையினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கும், வாக்குச் சாவடிகளுக்கும்அனுப்பப்பட்டுவிட்டனர்.

சுமார் 1 லட்சம் மத்தியப் படையினரும் போலீசாரும் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள ஊழியர்களும் தங்களது வாக்குச் சாவடிகளுக்குசெல்லத் தொடங்கியுள்ளனர். வாக்குப் பதிவை படம் பிடிக்க உதவும் வீடியோகேமராக்களும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பபட்டு வருகின்றன.

வாக்குச் சாவடிகளுக்கு அருகே உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்,பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன.

வாக்காளர்கள் கவனத்திற்கு!

சட்டசபைத் தேர்தலில் ஓட்டுப் போட காத்திருக்கும் வாக்காளர்களின் கவனத்தில் சிலமுக்கியத் தகவல்கள்.

வாக்குப் பதிவு தொடங்கும் நேரம் காலை 7 மணி. வாக்குப் பதிவு முடியும் நேரம்மாலை 5 மணி

வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது புகைப்பட அடையாள அட்டையை கட்டாயம்கொண்டு செல்ல வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்க்கண்ட 13 ஆவணங்களில்(அசல்) ஒன்றை கையோடு எடுத்துச் செல்லலாம்.

1. பாஸ்போர்ட்

2. 31.12.2005க்குள் வினியோகிக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம்

3. வருமான வரித்துறை வினியோகித்த பான் கார்டு

4. மத்திய, மாநில அரசுகள்,பொத்துறை நறுவனங்கள், பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சி ஆகியவை வினியோகித்துள்ள ஊழியர்

அடையாள அட்டை

5. 31.12.2005க்குள் வினியோகிக்கப்பட்ட வங்கி பாஸ் புத்தகம், தபால் நிலைய பாஸ்புத்தகம், விவசாயிகளுக்கான பாஸ் புத்தகம்

6. 31.12.2005க்குள் வினியோகிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கிய மாணவர்அடையாள அட்டை

7. 31.12.2005க்குல் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டுகள்

8. முன்னாள் ராணுவத்தினர், போர் விதவைகள் ஆகியோருக்கான புகைப்படத்துடன்கூடிய ஓய்வூதிய உத்தரவுகள்

9. முதியோர் ஓய்வூதிய புகைப்பட அடையாள அட்டை

10. ரயில்வே புகைப்பட அடையாள அட்டை

11. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான புகைப்பட அடையாள அட்டை

12. 31.12.2005க்குள் வினியோகிக்கப்பட்ட துப்பாக்கி உரிமம்

13. உடல் ஊனற்றோருக்கான புகைப்பட அடையாள அட்டை

செல்போன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாக்குச் சாவடிக்குச்செல்லும்போது செல்போன் உள்ளிட்ட எந்த போனையும் எடுத்துச் செல்லக் கூடாது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 60 தொகுதிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டு அங்குபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவை கண்காணிக்க மொத்தம் 284 மத்தியப் பார்வையாளர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர்.

தேர்தல் பணியில் 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 5,000 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அதே போல பாண்டிச்சேரியிலும் மேற்கு வங்கத்திலும் கடைசி கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளைநடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X