For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக நடிகர், நடிகையர்களின் உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் திமுக தலைவர்கருணாநிதி பேசியதாக கூறி மதுரையில் அதிமுகவைச் சேர்ந்த நடிகர், நடிகையர்மதுரை ஆதீனம் தலைமையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்த உண்ணாவிரத போராட்டம் 3 மணி நேரம் கூட நடக்கவில்லை.

மதுரை தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகம் எதிரே பார்வர்ட் பிளாக் (மூக்கையாதேவர்) கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உசிலம்பட்டியில் பிரசாரம் செய்த கருணாநிதி, கார்த்திக்குக்கு போலீஸ் போடும்தடைகளைக் குறிப்பிட்டு, சிறுத்தைகள் நடமாடலாம், சிங்கங்கள் நடமாடக் கூடாதாஎன்று கேட்டார்?

இதன்மூலம் கருாணாநிதி ஜாதிக் கலவரத்தைத் தூண்ட முயன்றதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

இந் நிலையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மூக்கையா தேவர் பிரிவுபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மதுரை ஆதீனம் முன்னிலை வகித்தார்.

இந்தப் போராட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த நடிகர், நடிகையரும் கலந்துகொண்டனர். எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், ராமராஜன், விஜயக்குமார்,பாண்டியன், செந்தில், குண்டு கல்யாணம், பாலு ஆனந்த், நடிகைகள் விந்தியா,

கோவை சரளா, தாரா, சங்கீதா, சி.ஆர்.சரஸ்வதி, பபிதா, இயக்குனர்கள் மனோபாலா,ஆர்.வி. உதயக்குமார், லியாகத் அலிகான், பாடலாசிரியரும் சசிகலாவின்உறவினருமான சினேகன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.

வழக்கமாக உண்ணாவிரதப் போராட்டம் என்றால் காலையில் ஆரம்பித்து மாலைவரை நடத்துவார்கள். ஆனால், இவர்கள் சிறிது நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்தனர்.

சிறிது நேரம் பந்தலில் அமர்ந்துவிட்டு மைக்கைப் பிடித்து கருணாநிதியை ஏகத்துக்கும் வாரிவிட்டு கலைந்துபோய்விட்டனர். நடிகர், நடிகைகள் கலைந்ததால் உண்ணாவிரத்தைப் பார்க்க வந்த பொது ஜனமும் கலைந்துபோய்விட்டனர்.

இதையடுத்து பார்வர்ட் பிளாக் கட்சியினரும் உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டுஇடத்தைக் காலி செய்தனர். ஆதீனமும் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டுமடத்திற்குப் போய் விட்டார்.

ஆண்டிப்பட்டியை கலக்கிய ஸ்டார்கள்:

முன்னதாகதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில்அதிமுகவைச் சேர்ந்த நடிகர்,நநிடிகையர் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே ஒரேநேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா மொத்தம் நான்கு நாட்கள் பிரசாரம் செய்தார்.இத்தொகுதியின் அதிமுக பிரசாரத்தை தினகரன் மேற்பார்வையிட்டு வருகிறார்.

அமைச்சர்களும், அதிமுக முக்கியப் புள்ளிகளும் தொகுதியில் தினசரி பிரசாரத்தில்ஈடுபட்டு வந்தனர்.

இவர்களைத் தவிர நடிகர்,நநிடிகையரும் பிரசாரம் மேற்கொண்டனர். ஏற்கனவேகட்சியில் சேர்ந்த நடிகர்கள் எஸ்.எஸ்.சந்திரன், செந்தில், ராமராஜன், சமீபத்தில் சேர்ந்தசரத்குமார், நிடிகைகள் சிம்ரன், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட பலர் பிரசாரம்மேற்கொண்டனர்.

இந் நிலையில், சனிக்கிழமை நடந்த இறுதிக் கட்டப் பிரசாரத்தில், பெரும் நட்சத்திரப்பட்டாளமே ஆண்டிப்பட்டி வந்திறங்கி கலக்கியது.

நடிகைகள் விந்தியா, கோவை சரளா, சங்கீதா, பபீதா, சி.ஆர்.சரஸ்வதி, நடிகர்கள்சரத்குமார், செந்தில், விஜயக்குமார், ராமராஜன், எஸ்.எஸ்.சந்திரன், தென்னிந்தியதிரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் ஃபெப்சி விஜயன்,

இயக்குனர்கள் மனோபாலா, ஆர்.வி. உதயக்குமார், லியாகத் அலிகான் உள்ளிட்டோர்ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் சுற்றி வந்து பிரசாரம் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X