For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெபாசிட் இழந்த டிஆர்-முத்துலட்சுமி-மந்திரிகள்

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

இயக்குனர் விஜய டி.ராஜேந்தர், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் தாங்கள்போட்டியிட்ட தொகுதிகளில் டெபாசிட் தொகையை திரும்பப் பெற முடியாதஅளவுக்கு குறைந்த வாக்குகளைப் பெற்றனர்.

லட்சிய திமுக என்ற கட்சியை ஆரம்பித்த ராஜேந்தர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகஆரம்பத்தில் செயல்பட்டார். ஆனால் அதிமுகவில் சீட் கிடைக்காத காரணத்தால்கடுப்பான அவர் 11 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டார்.

இருப்பினும் திமுக தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில் லட்சிய திமுகபோட்டியிடாத தொகுதிகளில் தனது ஆதரவை திமுகவுக்கு அளித்தார்.

திமுகவுக்காக தீவிரப் பிரசாரமும் செய்தார். இந் நிலையில் மயிலாடுதுறையில்போட்டியிட்ட அவர் படு தோல்வியை சந்தித்துள்ளார். அவருக்கு மொத்தமே 4,346ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனால் டெபாசிட் தொகையை அவர்பறிகொடுத்தார்.

இதேபோல பெண்ணாகரம் தொகுதியில் பாமகவினரின் ரகசிய ஆதரவோடு தேர்தலைசந்தித்தார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.

வெற்றி பெற்றாலும் பெறலாம் என்று கூறப்படும் அளவுக்கு பேசப்பட்டார். ஆனால்அவருக்குக் கிடைத்தது மொத்தமே 9,868 ஓட்டுக்கள்தான். இதனால் அவரும்டெபாசிட்டை இழந்தார்.

அமைச்சர்கள் தோல்வி:

அதே போல தேர்தலில் போட்டியிட்ட 22 அமைச்சர்களில் 9 பேர்தோல்வியடைந்துள்ளனர்.

வளர்மதி, சோமசுந்தரம், விஜயலட்சுமி பழனிச்சாமி, தாமோதரன், மில்லர்,ராமச்சந்திரன், ராமகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், தளவாய் சுந்தரம் ஆகியோர்தோல்வியைத் தழுவியவர்கள்.

இதில் 3 பேருக்கு டெபாசிட் கிடைக்கவில்லை.

ஆனந்தராஜுக்கு டெபாசிட் காலி:

இந் நிலையில் புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் ஆனந்தராஜ்டெபாசிட்டைப் பறி கொடுத்து பரிதாபமாகத் தோற்றுள்ளார்.

புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட உருளையன்பேட்டையில்முதலில் நேரு என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் திடீரெனஅவரை மாற்றி விட்டு நடிகர் ஆனந்தராஜ் களமிறக்கப்பட்டார்.

இதை எதிர்த்து அத்தொகுதி அதிமுகவினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேருசுயேச்சையாக உருளையன்பேட்டையில் போட்டியிட்டார். ஆனந்தராஜுக்கு கடும்மிரட்டலாக இருந்தது நேருவின் பிரசாரம்.

தேர்தலில் இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. சுயேச்சையாகப் போட்டியிட்டநேரு 6,549 வாக்குகள் பெற்று 2வது இடத்தைப் பிடித்தார். ஆனால் ஆனந்தராஜோ,வெறும் 710 வாக்குகளை மட்டுமே வாங்கி டெபாசிட் தொகையை பறிகொடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X