For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை முதல்வராக பதவியேற்கிறார் கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபை திமுக தலைவராக கருணாநிதி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு அவர் முதல்வராகப் பதவியேற்கிறார்.

Karunanithi
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று சென்னை அண்ணாஅறிவாலயத்தில் நடந்தது. இக் கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளஅத்தனை எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.

அதில், கருணாநிதி சட்டசபை திமுக தலைவராக தேர்வு செய்யும் தீர்மானத்தே பேராசிரியர் அன்பழகன் முன்மொழிந்தார். ஆற்காடு வீராசாமி அதை வழிமொழிந்தார்.

இதை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ளவே, கருணாநிதி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் எம்எல்ஏக்கள் அனைவரும் கருணாநிதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மகிழ்ச்சியில்லை: கருணாநிதி

இதையடுத்து எம்எல்ஏக்கள் இடையே பேசிய கருணாநிதி,

தேர்தலில் வென்ற உங்களை பாராட்டுகிறேன். அதிமுகவின் பெரும் பண பலத்தையும் மீறி இந்த வெற்றியைப்பெற்றிருக்கிறோம்.

திமுகவை மேலும் வலுப்படுத்தவும் சில சீர்திருத்தங்களைச் செய்யவும் இந்த இயக்கத்தை வலுப்படுத்தவும் இந்தப்பொறுப்பை ஏற்கிறேன்.

நான் எதிர்பார்த்ததை விட குறைவான இடங்களே கிடைத்துள்ளன. 123 இடங்கள் பெறுவோம் எனஎதிர்பார்த்தேன். ஆனால், 96 இடங்களே கிடைத்துள்ளன. எதிர்க் கட்சி கூட்டணி சார்பில் 69 பேர்சட்டமன்றத்துக்கு வருகிறார்கள். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் இவ்வளவு பெரிய எதிர்க் கட்சி இருந்ததில்லை. ஆளும் கட்சியாக இருந்தபோதேஎவ்வளவு அராஜகமாக, அநாகரீகமாக அவர்கள் நடந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

இதனால் நாம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்தப் பொறுப்பை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கவில்லை.மன உளைச்சலுடன் தான் ஏற்கிறேன்.

சட்டமன்றத்தில் எந்த வகையிலும் எள் அளவும் எதிர்க் கட்சிகள் மனம் கோணாதாவாறு நாம் நடந்து கொள்ளவேண்டும். எதிர்க் கட்சிகளோ பொது மக்களோ குறை சொல்லாத அளவுக்கு நாம் நடந்து கொள்ள வேண்டும்என்றார்.

இதைத் தொடர்ந்து கருணாநிதி ஆளுனர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுனர்சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்த கருணாநிதி அவருக்கு சால்வை அணிவித்தார்.கருணாநிதியை பர்னாலா கட்டித் தழுவி வாழ்த்தினார்.

இதையடுத்து ஆட்சி அமைக்க முறைப்படி கருணாநிதி உரிமை கோரினார். அப்போதுஅமைச்சரவைப் பட்டியலையும் கருணாநிதி வழங்கினார்.

நாளை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கும் பிரமாண்டமான நிகழ்ச்சியில் கருணாநிதி தமிழக முதல்வராகஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்கிறார். இதற்காக நேரு விளையாட்டரங்கில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகின்றன. ஆளுநர் பர்னாலா, கருணாநிதிக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், கம்யூனிஸ்ட்கட்சிகளின் தலைவர்கள் வரவுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ்கள் மூலம்ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் சென்னை வந்து குவிய ஆரம்பித்துவிட்டனர்.

சேப்பாக்கம் தொகுதியில் இம்முறையும் வெற்றி பெற்றதன மூலம், தோல்வியையே சந்திக்காமல், தொடர்ந்து 11முறை எம்எல்ஏவாகத் தேர்வாகி பெரும் சாதனை படைத்துள்ளார் கருணாநிதி.

அண்ணா மறைந்த பின் 1969ல் முதன்முதலில் முதல்வராகப் பதவியேற்ற கருணாநிதி, பின்னர் 1971, 1989,1996ல் ஆட்சியைப் பிடித்து முதல்வரானார். இப்போது ஐந்தாவது முறையாக மீண்டும் முதல்வராகிறார்கருணாநிதி.

இதற்கிடையே முதல்வராகும் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் வி.பி. தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்.நாளைய விழாவிலும் அவர் பங்கேற்பார் என்று தெரிகிறது.

இந் நிலையில் இன்று காலை முதல் அரசு உயர் அதிகாரிகள், விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், காவல்துறைஅதிகாரிகள், விஐபிக்கள், பல கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தவண்ணம்உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X