மதிமுக பொதுச் செயலாளர் வைகோவால், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எம்.பிக்கள் கோரிக்கை மனுகொடுத்துள்ளனர்.
அதில், கடந்த 1993ம் ஆண்டு திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட பின்னர்,வைகோவினால் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அப்போதுமத்திய உளவுத்துறை தகவல் அனுப்பியது.
இதையடுத்து அப்போதைய அதிமுக அரசு கருணாநதிக்கு கூடுதல் பாதுகாப்புஅளித்தது. கடந்த அதிமக ஆட்சியில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தகாரணத்தால் வைகோவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பொடா சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது தயாநிதிமாறனையும், அவரது குடும்பத்தினரையும் வைகோ கடுமையாக விமர்சித்தார். மேலும்அவருக்கும், தீவிரவாத அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
எனவே இந்தச் சூழ்நிலையில் தயாநிதி மாறனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்வைகோவினால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தயாநிதிக்கும் அவரதுகுடும்பத்தினருக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






