பீர் தொழிற்சாலை-கலெக்டரிடம் விஜயகாந்த் மனு

வெள்ளிக்கிழமை, ஜூன் 9, 2006, 5:30 [IST]
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் முந்திரியிலிருந்து பீர் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவவேண்டும் என்று கோரி தேமுதிக தலைவரும், விருத்தாச்சலம் தொகுதிஎம்.எல்.ஏவுமான விஜயகாந்த் மனு கொடுத்தார்.



விஜயகாந்த் இன்று காலை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடியைசந்தித்து தனது தொகுதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவைக்கொடுத்தார்.

மணிமுத்த ஆற்றுப் பாலத்தை சீரமைக்க வேண்டும், விருத்தாச்சலம் அரசுமருத்துவமனையை சீரமைத்து, புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.

பின்னர் கடலூர் அரசினர் விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களிடம் விஜயகாந்த்பேசுகையில்,

கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக விருத்தாச்சலத்தில் முந்திரி விளைச்சல் அபரிமிதமாகஉள்ளது. எனவே இதைப் பயன்படுத்தி முந்திரியிலிருந்து பீர் தயாரிக்கும்தொழிற்சாலையை விருத்தாச்சலத்தில் அமைக்கக் கோரியுள்ளேன்.

இந்த தொழிற்சாலை வந்தால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதேபோலபீங்கான் தொழிற்சாலையையும் தொடங்க கோரிக்கை விடுத்துள்ளேன்.

சட்டசபையைப் பொருத்தவரை நான் புதுமுகமாகவே இருக்கிறேன். இன்னும் சிலமாதங்கள் போனால்தான் சட்டசைபக் கூட்டத் தொடரில் என்னால் முழுமையாககலந்து கொண்டு செய்லபட முடியும்.

அனைத்துக் கட்சியினரையும் நான் நண்பர்களாகவே பார்க்கிறேன். யாரும் எனக்குஎதிரி இல்லை என்றார் விஜயகாந்த்.

கலெக்டரை விஜயகாந்த் சந்தித்தபோது கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டிராமச்சந்திரன் உடன் இருந்தார்.

ஓவர் நியாயம் பேசுபவராயிற்றே என்பதால், கடந்த தேர்தலில் உங்கள் கட்சிஎவ்வளவு செலவு செய்தது என்று ஒரு நிருபர் கேட்டபோது, கோமான விஜய்காந்த்..மொதல்ல திமுக, அதிமுக கிட்ட போய் இந்த கேள்விய கேட்டுட்டு எங்கிட்ட வாங்கஎன்றார். (அப்ப அவுங்களும் நீங்களும் ஒன்னு தானா?)

உங்கள் கட்சி உட்கட்சிப் பூசல் என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பியபோது.. எந்தக்கட்சியில உட்கட்சிப் பூசல் இல்ல என்று கோபத்துடன் பதில் தந்தார்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் உங்கள் நிலை என்ன என்ற கேள்விக்கு பதிலே தரவில்லைவிஜய்காந்த்.

IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST