அரசு டாக்டரின் செக்ஸ் கொடுமை; கமிஷனரிடம் கதறிய மாணவி!

புதன்கிழமை, ஜூன் 21, 2006, 5:30 [IST]
சென்னை:

சென்னை அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் செய்த செக்ஸ் கொடுமையிலிருந்துதப்பி மாநகர காவல்துறை ஆணையரை அணுகி கதறி அழுதபடி புகார்கொடுத்துள்ளார் பி.பார்ம் படிக்கும் மாணவி ஒருவர்.



நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஜனனி. இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.பார்ம்மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை 3 மணியளவில் தனதுஉறவினர்களுடன் எழும்பூரில் உள்ள மாநகர காவல்துறை ஆணையர்அலுவலகத்திற்கு கதறி அழுதபடி வந்தார் ஜனனி.

ஆணையர் லத்திகா சரணை நேரில் சந்தித்து அவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.அப்போது கதறி அழுத ஜனனியை ஆறுதல்படுத்திய ஆணையர் லத்திகா சரண் என்னநடந்தது என்று விசாரித்தார்.

அப்போது ஆணையரிடம் ஜனனி கூறியதாவது: நான் நாகர்கோவிலைச் சேர்ந்தவள்.எனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. கஷ்டமான நிலையிலும் சிரமப்பட்டு தான்பி.பார்ம் படித்து வருகிறேன்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எனது தந்தைக்கு கால்முறிவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.அவரைப் பார்ப்பதற்காக நான் தினமும் மருத்துவமனைக்குப் போவேன்.அப்போதுதான் அந்த டாக்டர் எனக்கு அறிமுகமானார்.

50 வயதைத் தாண்டிய அந்த டாக்டர் கல்யாணமானவர். என்னைப் பார்த்த அவர் என்மீது காதல் கொண்டார். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. அன்று முதல் கடந்தஒன்றரை வருடங்களாக என்னைத் துரத்தி துரத்தி வருகிறார். அவர் செய்தகொடுமைகள் ஏராளம். மிகவும் சிரமப்பட்டு அவரின் பிடியில் சிக்காமல் நான் தப்பிவந்தேன்.

இந் நிலையில் எனக்கு கல்யாணம் நடந்தது.அதன் பிறகாவது அந்த டாக்டரின்தொல்லையிலிருந்து தப்பி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அந்தக் காம வெறிபிடித்த டாக்டரோ, கணவரிடமிருந்து பிரிந்து வந்து விடு, அவனை (எனது கணவரை)விஷ ஊசி போட்டுக் கொன்று விடலாம்.

இருவரும் சந்தோஷமாக இருக்கலாம். உன்னை ராணி மாதிரி வைத்துக் கொள்கிறேன்.அப்படி நீ வராவிட்டால் உனக்கு விஷ ஊசி போட்டுக் கொன்று விடுவேன் என்றுமிரட்டத் தொடங்கினார்.

ஆனால் அதற்கு நான் சம்மதிக்கவில்லை.

என் படிப்பு விஷயத்திலும் அந்த டாக்டர் தலையிட்டார். எனது கணவர் நீதி ராஜனுடன்எழும்பூரில் வீடு பிடித்து தங்கினேன். இதனால் ஆத்திரமடைந்த அந்த டாக்டர்,சமீபத்தில் தனது அறைக்கு வருமாறு என்னைக் கூப்பிட்டார். ஆனால் நான்போகவில்லை. நீ உடனடியாக வராவிட்டால் என் பவரை வைத்து உன்னைஃபெயிலாக்கி விடுவேன், எதிர்காலத்தை சீரழித்து விடுவேன் என்று மிரட்டினார்.

நான் பயந்து போய் அவரது அறைக்குச் சென்றேன். அழுதபடியே, நான் மிகவும்ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். என்னை விட்டு விடுங்கள் என்று கை கூப்பிகெஞ்சிக் கதறினேன். ஆனால் அந்த டாக்டர் என்னை விடவில்லை. என்னை அடையஅவர் முயற்சித்தார். பலாத்காரத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரிடமிருந்து விடுபட நான் போராடினேன். அதில்எனது பற்கள் உடைந்தன. கடும் போராட்டத்திற்கு மத்தியில் அவரிடமிருந்துதப்பினேன். இதேபோல ஏற்கனவே ஒருமுறையும் அவர் நடந்து கொண்டுள்ளார்.அப்போதும் சிரமப்பட்டு தான் அவரிடமிருந்து தப்பினேன்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்பதால் எனது கணவரிடம் கூறினேன். அவர்நேராக டாக்டரிடம் சென்று இத்தோடு விட்டு விடு என்று மிரட்டினார். ஆனால் அதைடாக்டர் சட்டை செய்யவில்லை. உன்னால் ஒன்றும் செய்ய டியாது, நான் பெரும்செல்வாக்கு படைத்தவன் என்று கோபத்துடன் கூறினார்.

இதையடுத்து எனது கணவர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேஉள்ள பொன்னமங்கலம் கிராமத்தில் உள்ள தனது உறவினர்களை சென்னைக்குவரவழைத்தார். அத்தோடு மதுரையில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும், செல்வாக்குபடைத்த தனது உறவினர் தயாநிதியையும் வரவழைத்தார்.

அனைவரும் சேர்ந்து டாக்டரை சந்தித்து இத்தோடு விட்டு விட்டால் நல்லது என்றுமிரட்டினர். அதன் பின்னர் அனைவரும் சேர்ந்து ஒரு ஹோட்டலுக்குச் சென்றுசாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு டாக்டரின் அடியாட்கள் சிலர் வந்துஎங்களை மிரட்டினர்.

உடனடியாக ஊரை விட்டுப் போய் விடுங்கள் என எனது உறவினர்களை மிரட்டினர்.அந்த டாக்டர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் இப்போது புகார்கொடுக்க வந்துள்ளேன்.

அந்த டாக்டர் செல்வாக்கு படைத்தவர். டாக்டர்கள் சங்கத் தலைவராக ஏற்கனவேஇருந்துள்ளார்.

எனக்கும், எனது கணவருக்கும் அவரால் ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன்.எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, அந்த டாக்டரையும் கடுமையாகதண்டிக்க வேண்டும் என்று கூறினார் ஜனனி.

மிகுந்த பயத்தோடு, மன நிலை பாதித்தவர் போல காணப்பட்ட ஜனனியை ஆணையர்லத்திகா சரண் ஆறுதல்படுத்தி இதுகுறித்து விசாரிக்குமாறு துணை ஆணையர் சீமாஅகர்வாலை பணித்தார்.

மேலும் அவரிடம் செல்லுமாறும் ஜனனிக்கு அறிவுறுத்தினார். ஜனனிக்குப் பாதுகாப்புஅளிக்க 2 பெண் போலீஸாரையும் உடனடியாக நியமித்தார்.

ஜனனி புகார் கூறிய டாக்டரின் பெயர் பிரின்ஸ் என்று கூறப்படுகிறது. அவரது இந்தகாமக் கொடூர செயலுக்கு டாக்டர் சிவனாண்டி (இங்கேயும் ஒரு சிவணான்டியா?)என்பவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

இருவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் முதல்வரை சந்தித்துப் புகார் கொடுப்போம் என்று ஜனனியின்உறவினர்கள் கோபமாக கூறினர்.

ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்த ஜனனியை புகைப்படம் எடுக்கபத்திரிக்கையாளர்கள் முயன்றபோது, கதறி அழுதபடி இருந்த ஜனனிகோபமடைந்தார். என்னைப் புகைப்படம் எடுத்தால் மாடியிலிருந்து கீழே குதித்துவிடுவேன் என்று தடுப்புச் சுவர் மீது ஏறி கீழே குதிக்க முயன்றார்.

இதையடுத்து அவரை போலீஸார் சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.

டாக்டர் மீது நடவடிக்கை:

இந் நிலையில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த அரசு மருத்துவர் பிரின்ஸ் பிரபாகர்மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மருத்துவக் கல்லூரி டீன் கலாநிதி அரசுக்குப்பரிந்துரைத்துள்ளார்.

மேலும் டாக்டர் பிரின்ஸ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறும் உயர்அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளார்.

இதுகுறித்து கலாநிதி கூறுகையில், டாக்டர் பிரின்ஸ் பிரபாகர் அரசு பொதுமருத்துவமனையில் டாக்டராக இல்லை. பொது சுகாதாரத் துறையில் அவர்பணியாற்றி வருகிறார். அங்கிருந்து பொது மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்.

பொது சுகாதாரம் குறித்து அவர் பாடம் எடுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே, சர்ச்சையில் சிக்கியுள்ள டாக்டர் பிரின்ஸ், நான் நிரபராதி, என் மீதானபுகாரை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST