காஞ்சி திரும்பிய சங்கராச்சாரியார்கள்

திங்கள்கிழமை, ஜூலை 10, 2006, 5:30 [IST]
காஞ்சிபுரம்:

சங்கர்ராமன் கொலை வழக்கையெடுத்து தொடர்ந்து கலவை மடத்திலேயே தங்கியுள்ள காஞ்சிசங்கராச்சாரியார்களான ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் காஞ்சி மடத்துக்குத் திரும்பியுள்ளனர்.



நாளை (11ம் தேத்) முதல் சதுர்மாஸ்ய விரதம் தொடங்குவதையொட்டி அவர்கள் இன்று காஞ்சிக்கு வந்தனர்.அவர்களை சங்கர கோஷம் முழங்க, மாலைகள் அணிவித்து பக்தர்கள் வரவேற்றனர். காமாட்சி அம்மன் ஆலயபூசாரிகள் சங்கராச்சாரியார்களுக்கு தாமரைப் பூக்கள் தந்து வரவேற்றனர்.

இந்த விரதம் செப்டம்பர் 7ம் தேதி வரை தொடரும். அதுவரை இரு சங்கராச்சாரியார்களும் காஞ்சியிலேயேதங்கியிருந்து விரதம் கடைபிடிக்கவுள்ளனர்.

இந்த தினங்களில் தினமும் சந்திரமெளலீஸ்வரருக்கு பூஜையும், வேத பாராயணமும் நடக்கும். மாலையில் இசைநிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. இதற்கிடையே வரும் அக்டோபர் 10ம் தேதி ஜெயேந்திரருக்கு 72வது பிறந்த நாள்பிறக்கிறது.

IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST