தியேட்டர் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம்

திங்கள்கிழமை, ஜனவரி 1, 2007, 5:30 [IST]
சென்னை:தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வில் தமிழக அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது. ஒரேவளாகத்தில் 2க்கும் மேல் உள்ள தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்என அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்களுக்கும், அவை அமைந்திருக்கும்உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்து கட்டணங்களை நிர்ணயித்து இன்று முதல்நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அரசு ஆணையிட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகரத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அரசுஅண்மையில் குறைத்துள்ள தியேட்டர்களுக்கான புதிய கட்டண விகிதங்களைமுழுமையாக வரவேற்று நன்றி தெரிவித்துள்ளதுடன், சிறப்பாக அமைக்கப்பட்டகுறிப்பிட்ட எண்ணிக்கை வசதிகளுடன், குளிர்சாதன வசதிகளையும் கொண்டஇரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உடைய வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ள அதிகபட்சக் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தின்அடிப்படையிலும், பொதுமக்கள் நலன் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்றஅடிப்படையிலும், தியேட்டர் வளாகங்களுக்கான கட்டணங்களை பின்வருமாறுதிருத்தி முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மொத்தம் 3 விகிதங்களில் தியேட்டர்கள் பிரிக்கப்பட்டு கட்டணம்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் விகிதம்: 2 தியேட்டர்கள், அதற்கும் கூடுதலாக உள்ள, ஏசி வசதி உடையதியேட்டர்கள், எல்லா தியேட்டர்களுக்கும் சேர்த்து மொத்தம் 800க்கும் குறைவில்லாதஎண்ணிக்கை உள்ள இருக்கைகள், இருக்கையின் அகலம் 20 அங்குலத்திற்கும்குறையாமல் இருத்தல்;

இருக்கை வரிசைகளுக்கு இடையிலா இடைவெளி 1050 மில்லி மீட்டர் குறையாமல்இருத்தல், நூறு சதவீத சக்தியை உள்ளடக்கிய ஜெனரேட்டர், டிஜிட்டல் திரைப்படக்கருவி, டிஜிட்டல் ஒலி அமைப்பு, மூன்று பிரதான ஒலிபெருக்கிகள், சுற்றுப்புறஒலிபெருக்கி வசதிமுறை, தானியங்கி சுத்திகரிப்புடன் கூடிய கழிப்பிட வசதி,குளிர்சாதன வெளிக்கூடம், கம்ப்யூட்டர் டிக்கெட் முறை, இணையதள டிக்கெட் முறை,வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யும் வசதி உடைய தியேட்டர்களுக்குகுறைந்தபட்சம் ரூ. 10, அதிகபட்சம் ரூ. 95 டிக்கெட் கட்டணமாக இருக்கும்.

2வது விகிதம்: இரண்டுக்கும் அதற்கு அதிகமாக உள்ள தியேட்டர்கள், மொத்தம்800க்கு குறைவில்லாத இருக்கைகள், நூறு சதவீத சக்தி கொண்ட ஜெனரேட்டர்கள்,டிஜிட்டல் திரைப்படக் கருவி, டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவி மற்றும் முதல் வகையில்உள்ள 15ல் ஏதாவது ஐந்து வசதிகள் கொண்ட தியேட்டர்களில் குறைந்த பட்சம் ரூ. 10,அதிகபட்சம் ரூ. 85 ஆக டிக்கெட் இருக்கும்.

கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளையும், உணவு நிலையத்தையும், குளிர்சாதனவசதியையும் கொண்ட ஒரே வளாகத்தில், மூன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களின்உயர்ந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 120 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ. 10ஆகவும் இருக்கும்.

தென்னிந்தியாவிலேயே ஒரே திறந்தவெளி தியேட்டரான பிரார்த்தனாவில் தற்போதுஉள்ள நடைமுறைப்படி டிக்கெட் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST