For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேட்டை நடத்தி தமிழ் வளர்ப்போம்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:அடைக்க வேண்டிய ஓட்டைகளை அடைத்து, நடத்த வேண்டிய வேட்டையைவெற்றிகரமாக நடத்தி, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை வளர்ப்போம் என்றுமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை முத்தமிழ்ப் பேரவையின் 31வது ஆண்டு இசை விழா சென்னையில்நடந்தது.

இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு குன்றக்குடி பொன்னம்பலஅடிகளாருக்கு இயல் செல்வம் விருதையும், ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளைக்குராஜரத்னா விருதையும், கீதா ராஜசேகருக்கு இசைச் செல்வம் விருதையும், திவ்யகஸ்தூரிக்கு நாட்டியச் செல்வம் விருதையும், நீடாமங்கலம் கண்ணப்பா பிள்ளைக்குதவில் செல்வம் விருதையும், கும்பகோணம் பிரேம்குமாருக்கு மிருதங்க செல்வம்விருதையும் வழங்கினார்.

விருதுடன் பாராட்டுப் பத்திரம், தங்கப் பதக்கம் மற்றும் கருணாநிதி எழுதிய கவிதைமழை என்ற நூலும் பரிசாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தலைமை உரையாற்றினார்.அவர் பேசுகையில், தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொண்டாற்றி வருகிறார் முதல்வர்கருணாநிதி.

அதுபோல இங்கு பட்டம் வென்ற அனைவரும் தமிழுக்கு மேலும் தொண்டு செய்யவேண்டும். குமரிக் கண்டம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை ஆய்வு செய்துஅதற்கான காலத்தை நிர்ணயிக்க வேண்டும். இது கலைஞர் ஆட்சிக் காலத்திலேயேநடைபெற வேண்டும் என்றார்.

விருது வழங்கி பின் கருணாநிதி பேசுகையில், தமிழின் பெயரால், தமிழர்களின்பெயரால் எந்த ஒரு அமைப்பை உருவாக்கினாலும் அதன் ஆயுட்காலம்குறைவாகத்தான் இருக்கும் என்பது நாம் கண்ட வரலாற்று நிகழ்ச்சி.

அதற்கெல்லாம் விதிவிலக்காக, மாற்றாக, இந்த மாமன்றம் 30 ஆண்டுகளைக் கடந்து,31வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நான் நீண்டகாலம் நிறைவேற்றாமல் இருந்த ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதுதான் தவத்திருகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு இயல் செல்வம் விருது வழங்கப்பட்டநிகழ்ச்சி.

தமிழகத்தில் ஆன்மீகத்திற்கு புதுப் பொலிவை, தனி வலுவை, தனி கீர்த்தியைஉருவாக்கிய பெருமைக்குரியவர் மறைந்த பெரியவர் குன்றக்குடி அடிகளார்.அவரிடம் நான் கொண்ட அன்பு, அவர் என்னிடம் கொண்டிருந்த அன்பு சிறிதும்மாறாமல் பழகினோம்.

இங்கு வந்துள்ள நம்முடைய இளம் அடிகளார் எப்படி இருப்பாரோ என்று நாங்கள்கருதிய நேரத்தில், அவர் தன்னுடைய வாழ்க்கையின் மூலம், தன்னுடையகருத்துக்களை எடுத்துத் தரும் செயலின் மூலம் நானும் அப்படித்தான் இருக்கிறேன்என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று பேசினார். நீங்கள் எல்லாம் இருந்தால்,இன்னும் கூட ஒரு பத்து அல்லது இருபது ஆண்டு காலம் ஆயுள் எனக்கு நீண்டுதமிழுக்கும், நாட்டுக்கும் சேவை செய்யக் கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்படும்.

பொள்ளாச்சி மகாலிங்கம், செல்வச் சீமான் மட்டுமல்ல, அருள்செல்வர், வடலூர்வள்ளளாருடைய புகழைப் பரப்புகிறவர். இவரைப் போலவே சி.சுப்பிரணியமும்தமிழக காங்கிரஸ் கட்சியில் மாத்திரமல்ல, அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலேபெரும் பொறுப்புகளிலே இருந்தவர். பெருந்தலைவர் காமராஜருக்கு உற்றத்தொண்டராக, தோழராக, துணைவராக இருந்தவர்.

சி.சுப்பிரமணியம் நிதியமைச்சராக இருந்தபோது நானும், பேராசிரியர் அன்பழகனும்,1957ம் ஆண்டு சட்டமன்றத்திற்குள் முதல் முறையாக நுழைந்தோம். இன்றும்இருவரும் சட்டசபையில்தான் இருக்கிறோம். எத்தனை ஆண்டுகள் என்பதைகணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் கணக்கில் கொஞ்சம் வீக்.

ஒருமுறை இந்த ஆட்சியை, ஓட்டை விழுந்த கட்சி என்று சிலர் சொன்னார்கள்.அப்போது அண்ணா திருவாரூரில் இருந்தார். அங்கே அண்ணா சொன்னார், ஆமாம்இது ஓட்டைகள் நிறைந்த ஆட்சிதான். ஆனால் இந்த ஓட்டைகள் எல்லாம் ஏனோதானோ என்று விழுந்த ஓட்டைகள் அல்ல, நாதஸ்வரத்திலே இருக்கிற ஓட்டைகளைப்போன்றது. புல்லாங்குழலிலே இருக்கிற ஓட்டைகளைப் போன்றது.

எந்தத் துவாரத்தை அடைத்தால் என்ன நாதம் வரும் என்று எனக்குத் தெரியும். ஆகவேஎத்தனை ஓட்டைகள் இருந்தாலும் இருக்கட்டும். அந்த ஓட்டைகளை அடைக்கஎனக்குத் தெரியும் என்றார்.

அண்ணாவின் தம்பிகளாகிய நாங்கள் இன்று ஆட்சியில் இருக்கிறோம். அடைக்கவேண்டிய ஓட்டைகளை அடைத்து, நடத்த வேண்டிய வேட்டைகளையும்வெற்றிகரமாக நடத்தி முடித்து இயல், இசை, நாடகம் என்கிற இந்த முத்தமிழைவளர்ப்போம், வாழ்த்துவோம் என்றார் கருணாநிதி.

இந் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அமைச்சர்ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, அமைச்சர்கள், பல்துறை கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X