For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜோதிக்கு ஆப்பு வைத்த சிவாஜி வாரிசு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சத்ரபதி சிவாஜியின் வம்சாவழியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமர்நாத் ராவ் காண்டே மூலம் அதிமுகவின் பவர்ஃபுல் வழக்கறிஞரும், எம்.பியுமானஜோதிக்கு பெரிய ஆப்பு வந்துள்ளது.

Jyothiகாவிரி வழக்கில் வாதாடுவதாக கூறி, பல லட்சம் அரசுப் பணத்தை ஸ்வாகா செய்து விட்டதாக ஜோதி மீது சிபிசிஐடி போலீஸில் புகார்கொடுத்துள்ளார் காண்டே. அதற்கு முன்பே, ஜோதியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்தும், எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு அவர் பணம்பார்த்து வருவது குறித்தும் குடியரசுத் தலைவருக்கு மனுவைத் தட்டி விட்டவர் காண்டே.

அந்த மனுவை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு குடியரசுத் தலைவர் அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச்செயலாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்.

கடந்த அதிமுக ஆட்சியில் அந்த நோட்டீஸ் வந்தது. ஆட்சி அதிகாரம் அதிமுகவிடம் இருந்ததால், நோட்டீஸை கிடப்பில் போட்டு விட்டனர்.திமுக ஆட்சிக்கு வந்ததும், தலைமைச் செயலாளர் திரிபாதி அந்த நோட்டீஸுக்கு பதில் அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில்தான் ஜோதி மீது சிபிசிஐடியிடம் வலுவான ஆதாரங்களோடு புகார் கூறியுள்ளார் காண்டே. இந்த சமாச்சாரத்துக்கள் போவதற்குமுன்பு காண்டே குறித்த ஒரு சைடு ஸ்டோரி.

தொண்டை வலிக்க வாதாடி, வாய்தா கேட்டு, வழக்கு நடத்தும் சாதாரண வழக்கறிஞர் அல்ல காண்டே. சமூகத்தில் நடக்கும் விஷயங்களைக்கவனித்து கண்ணை உறுத்தும் விவகாரங்களை பூதக் கண்ணாடி வைத்து உற்று நோக்கி, அதை எதிர்த்துப் போராடும் வீர வழக்கறிஞர்தான்காண்டே.

இவரது பூர்வீகம் மகாராஷ்டிர மாநிலம் ஆகும். சத்ரபதி சிவாஜியின் வம்சத்தில் வந்தவர் காண்டே. அதனால் இயல்பாகவே இவருக்குள்துணிச்சலும், தைரியமும் ரத்தத்தோடு கலந்து விட்டவை ஆகும்.

ஜோதி மீது காண்டேவுக்கு காண்டு ஏற்பட முக்கியமான காரணம் ஒன்று உண்டு. கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக சென்னை மாநகரஆணையராக இருந்த நடராஜ் மீது பெரிய புகார் எழுந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிப் பேசப் போக, டென்ஷன் ஆனதேர்தல் ஆணையம், நடராஜை டிரான்ஸ்பர் செய்ய உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அந்த வழக்கில் ஆஜரான ஜோதி, ஜெயலலிதாவைப்புகழ்ந்து பேசுவது தவறா? அப்படியானால் தேசிய கீதத்தில் கூட ஜெய ஜெய ஜெய என்று வருகிறது, அதைப் பாடினால் கூட ஜெயலலிதாவைப்புகழ்ந்து பேசியதாக நடவடிக்கை எடுப்பார்களா என்று கேட்டார்.

இதைக் கேள்விப்பட்ட காண்டே காட்டமானார். இதையடுத்து ஜோதியின் பின்னணியை சைலன்ட்டாக நோண்ட ஆரம்பித்தார். அதற்காக அவர்பட்ட பாடு பெரும் பாடு. அதை அவரது வாயாலேயே கேட்போம்.

ஜெயலலிதா மீதான டான்சி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றில் ஜோதிதான் ஜெயலலிதாவுக்காக ஆஜரானார். இதற்காக 2001ம்ஆண்டு டிசம்பர் 4ம் தேதி முதல் 2004ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி வரை பலமுறை டெல்லிக்குச் சென்றார்.

இதற்கான விமானக் கட்டணமாக 2 லட்சத்து 43 ஆயிரத்து 240 ரூபாயை, காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்குக்கான பயணம் என்றுகணக்கில் காட்டியுள்ளனர். பொதுப்பணித்துறைதான் இந்தப் பணத்தை செலவழித்துள்ளது.

இதுமட்டுமல்ல, ஜோதிக்கு டெல்லியில் ஸ்வர்ணஜோதி சதர்ன் பகுதியில் டாக்ர் பி.டி.மார்க் என்ற இடத்தில் அரசு ஒதுக்கிய வீடு உள்ளது. ஆனால்தமிழ்நாடு இல்லத்தில், வாடகைக்கு தங்கி, சாப்பாடு, டெலிபோன், டாக்சி ஆகிய செலவுக்காக அரசிடமிருந்து 7 லட்சத்து 95 ஆயிரத்து 264ரூபாயைப் பெற்றிருக்கிறார்.

இதையெல்லாம் திரட்டிய நான், 40 பேரிடம் கையெழுத்து வாங்கி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு 2006ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி புகார்கடிதம் அனுப்பினேன். பின்னர் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் அனுப்பினேன்.

இதுதவிர, எம்.பியாக இருக்கும் ஜோதி, தனியாக வக்கீல் தொழிலும் பார்த்து காசு சம்பாதித்து வருகிறார். மேலும், அரசுப் பணத்தையும்நேரடியாகப் பெற்று வருகிறார். இந்தப் புகாரை ஆய்வு செய்த குடியரசுத் தலைவர் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையமும் அந்த புகாரை பரிசீலித்து தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால்அப்போது இருந்து தலைமைச் செயலாளர் அதைக் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் திரிபாதி தலைமைச் செயலாளராக வந்த பின்னர் இந்த நோட்டீஸைப் பார்த்து பதில் அனுப்பினார். அதில், காவிரிபிரச்சினைக்காக ஜோதியை அரசு வழக்கறிஞராக நியமிக்கவில்லை. அதற்காக நியமிக்கப்படும் வழக்கறிஞர்களுக்குரிய சம்பளத்தையும் ஜோதிபெறவில்லை.

அவர் வேறு காரணங்களுக்காக பணம் பெற்றிருப்பது தெரிய வருகிறது. டெல்லியில் அவருக்கு அரசு வீடு இருந்தும், வேறு வகையில், அரசுப்பணத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தியுள்ளார் என்று பதில் கடிதத்தில் கூறியிருந்தார் திரிபாதி.

இதையடுத்து ஜோதிக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. அதற்கு அவர் அளித்த பதிலில், தனிப்பட்ட முறையில்தான்வக்கீலாக இருக்கிறேன். காவிரி நீர் விவகாரத்திற்கான வக்கீலாக நான் செயல்படவில்லை.

காவிரிப் பிரச்சினைக்காக டெல்லி சென்று மூத்த வக்கீல்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் குழுவில்நானும் இடம் பெற்றிருந்தேன். இதுதொடர்பாக மேலும் விளக்கம் அளிக்க டைம் வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதை விடுங்கள், நமது நாட்டின் தேசிய கீதத்தையே அவமானப்படுத்திப் பேசியுள்ளார் ஜோதி. தனக்கு எதிராக அதிகாரிகள் செயல்படமாட்டார்கள் என்பதால்தான் இவர் இப்படி ஆடியுள்ளார்.

அவர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை நான் முழுமையாக திரட்டியுள்ளேன். ஆனால் அதற்காக நான் மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. ஆட்சிமாறியும் கூட அதிகாரிகள் இன்னும் முழுமையாக மாறவில்லை. கஷ்டப்பட்டு, போராடித்தான் இவற்றை பெற முடிந்தது என்றார் காண்டே.

எம்.பியாக இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில், வக்கீலாக பணியாற்றுவதில் தவறில்லை என்று கூறப்படுகிறது. ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன்ஆகியோரை அதற்கு உதாரணம் காட்டுகிறார்கள். அதேசமயம், அரசுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியிருப்பது மிகப் பெரிய குற்றம்,நம்பிக்கை துரோகம். இது எம்.பியாக இருப்பவர்கள், எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது என்று கூறப்படுகிறது.

எனவே காண்டே கிளப்பியுள்ள இந்தப் புகார் ஜோதிக்கு பெரும் ஆபத்தாக அமையும் என கூறப்படுகிறது. காண்டேவின் இந்த அதிரடிஅட்டாக்கிலிருந்து ஜோதி எப்படி மீளுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா மீதான பல வழக்குகளிலும் ஆஜராகி வருபவர் ஜோதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X