For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகத்தில் தமிழக பஸ் மீது தாக்குதல்-தமிழ்நாளிதழ்களுக்கு தடை-ஐடி ஊழியர் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

ஓசூர்:பெங்களூரிலிருந்து ஓசூர் திரும்பிக் கொண்டிருந்த தமிழக அரசு விரைவுப் பேருந்து கல்வீசித் தாக்கப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்து கர்நாடகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. பெங்களூரில்நடந்து வந்த போராட்டம் சற்றே ஓய்ந்ததைத் தொடர்ந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு பேருந்துகள் மற்றும் பிற வாகனப் போக்குவரத்து கடந்தசில நாட்களாக பிரச்சினையின்றி நடந்து வந்தது.

இந் நிலையில் நேற்று பெங்களூர் சென்ற தமிழக அரசுப் பேருந்து கல்வீசித் தாக்கப்பட்டது.

ஓசூ>லிருந்து பெங்களூருக்கு அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்றது. அதை மணிவாசகம் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை பெங்களூர் சென்றஅந்தப் பேருந்து மீண்டும் ஓசூர் திரும்பியது.

பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். லக்கசந்திரா என்ற இடத்தில் பேருந்து வந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து கல்வீசித் தாக்குதல் நடத்தியது.இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, பேருந்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். பின்னர் அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில்பயணிகளை ஏற்றி ஓசூருக்கு அனுப்பினர். டிரைவர் மணிவாசகம் கண்ணாடி உடைந்த நிலையில் பேருந்தை ஓசூருக்கு ஓட்டி வந்தார்.

இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. மாவட்ட எஸ்.பி. தேன்மொழி எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தமிழக எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சாமியார்கள் போராட்டம்:

இதற்கிடையே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்த்ைச சேர்ந்த சாமியார்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இதுகுறித்து பெட்டாபுரா ஸ்ரீ சென்னபசவ தேசிகேந்திர சுவாமிஜி மற்றும் அத்வைத் மடாதிபதி சிவலிங்கேந்திர சுவாமிஜி ஆகியோர் மைசூ>ல்செய்தியாளர்களிடம் பேசுகையில், சீக்கிய, கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் இந்து மதத் தலைவர்கள், பல்வேறு மடத் தலைவர்கள் என கிட்டத்தட்ட200க்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மைசூருக்கு வரவுள்ளனர்.

20ம் தேதி அனைவரும் பங்கேற்கும் பாதயாத்திரை நடைபெறவுள்ளது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டுமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முடிவடையும்.

அங்கு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்து தயாரிக்கப்பட்டுள்ள மனுவை ஆட்சித் தலைவ>டம் வழங்கவுள்ளோம்.

கர்நாடக விவசாயிகள் நலனைப் புறக்கணிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்பட்டால் டெல்லிக்குச் சென்று குடியரசுத்தலைவர் மாளிகை முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் கூறினர்.

ஸ்ரீ ரவிசங்கரும் ...

இப்போராட்டத்தில் ஆர்ட் ஆப் லிவிங் நிறுவனத் தலைவரும், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமி, ஆதிசுன்சுனகிரி மடாதிபதி பாலகங்காதர சுவாமி, சுட்டூர் மடாதிபதி சிவாத்ரி தேசிகேந்திர சுவாமி, உடுப்பி பெஜாவர் மடாதிபதிவிஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி உள்ளிட்டோர் முக்கிய மடாதிபதிகள், ஆன்மீகத் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே, மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

மாண்டியா மாவட்டத்தில் மட்டூர், கே.ஆர்.பேட்டை, ஸ்ரீரங்கப்பட்டனா, மாண்டியா ஆகிய நகரங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மாண்டியாவில் காவிரி பாதுகாப்பு சமிதி சார்பில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் நாளிதழ்கள் நிறுத்தம்:

மைசூரில், இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழ் நாளிதழ்களை வினியோகிப்பதை நிறுத்தி வைக்க மைசூர் செய்தித்தாள் வினியோகஸ்தர்கள் சங்கம்முடிவு செய்துள்ளது.

சாப்ட்வேர் என்ஜினியர்கள் போராட்டம்:


இந் நிலையில் பெங்களூர் மகாத்மா காந்தி சாலையில் கன்னட சாப்ட்வேர் என்ஜினியர்கள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து போராட்டம்நடத்தினர். சுமார் 600 பேர் இந்தப் போரட்டத்தில் பங்கேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X