Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காவிரி பிரச்சினையும், என் பிறப்பும்-கருணாநிதி!

Published: Thursday, February 22, 2007, 5:30 [IST]

தஞ்சாவூர்காவிரிப் பிரச்சினை பிறந்தது முதல் இன்று வரை நான் மட்டுமே இருக்கிறேன். பிரச்சினையை முழுமையாக தீர்க்க முனைப்போடு செயல்படுகிறேன்என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

மறைந்த திருச்சி அன்பில் பொய்யாமொழி மகன் மகேசு, ஜனனி திருமணம் தஞ்சையில் இன்று நடந்தது. திருமணத்தை முதல்வர் கருணாநிதிதலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், இதுஉணர்ச்சி மிக்க குடும்ப விழா, 80 வருடமாக இந்த நிலை தொடருகிறது.

அன்பில் என்னை வாழ வைத்தவர். பல வருடங்களுக்கு முன்பு கொள்ளிடக் கரையோர கிராமத்தில் திருமண விழாவில் பங்கேற்றேன். திரும்பநேரமாகி விட்டது. போகும்போது ஆற்றை மாட்டு வண்டியில் கடந்து போய் விட்டோம். திரும்பும்போது மாட்டு வண்டியில் ஆற்றைக் கடக்கமுடியவில்லை.

நடந்து கடக்க முயற்சித்தபோது, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அன்பில் என்னைத் தூக்கிக் கொண்டார். பராங்குசம், முரசொலி மாறனை தூக்கிக்கொண்டார். என்னை மட்டும் அன்பில் காப்பாற்றமல் இருந்திருந்தால் பல பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைத்திருக்கும்.

நான் பிறந்தபோதுதான் காவிரிப் பிரச்சினையும் பிறந்தது. 1968ல் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, கர்நாடக முதல்வர் வீரேந்திரபாட்டிலை சந்தித்துப் பேசினேன்.

அதன் பின்னர் 11 கர்நாடக முதல்வர்களிடம் பேசியுள்ளேன். 7க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்களிடம் பேசியுள்ளேன். இவர்களில் பலரும்இப்போது இல்லை.

காவிரிப் பிரச்சினை தொடங்கியது முதல் இப்போது வரை நான் மட்டுமே உள்ளேன். பிரச்சினை தீர்ந்தது என்ற செய்தி கிடைக்காவிட்டாலும் கூடதீர்க்கப்பட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன் என்றார் கருணாநிதி.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST