Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கவுன்சிலர்கள் தாவலுக்கு தடை கோரும் கேப்டன்

Published: Thursday, February 22, 2007, 5:30 [IST]

சென்னை:கவுன்சிலர்களின் கட்சி தாவலுக்கு தடை விதிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 67 வார்டுகளுக்கு நடந்த மறு தேர்தலில் தேமுதிக 5 வார்டுகளில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சியினர் உற்சாகத்தில்உள்ளனர். இந்நிலையில் 27வது வார்டு கவுன்சிலர் சர்தார் திடீரென முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

இதுகுறித்து விஜய்காந்த் கூறியதாவது,

மக்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது. ஆனால் பண பலமும், அதிகார பலமும் பெரிய கட்சிகளிடம் இருக்கிறது. வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சிமாறுவதை என்னால் எப்படி தடுக்க முடியும். ஆனால் இது தடுக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை தடுக்க சட்டம் இருக்கிறது. அது போல கவுன்சிலர்கள் கட்சி மாறுவதை தடுக்ககட்டாயமாக சட்டம் கொண்டு வர வேண்டும். சென்னை மாநகராட்சியில் தேமுதிக பெற்ற வெற்றி எங்களுக்கு பிள்ளையார் சுழி. பல்வேறுமிரட்டல்களுக்கு இடையே எங்கள் கட்சி வேட்பாளர்கள் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளனர்.

2006 அக்டோபரில் நடந்த தேர்தலில் தேமுதிக 155 வார்டுகளில் 80 ஆயிரம் ஓட்டுகள் பெற்றது. தற்போது 63 வார்டுகளில் 30 சதவீதஓட்டுபதிவிலும் 1.16 லட்சம் ஓட்டு தேமுதிகவுக்கு கிடைத்துள்ளது. பயம் இல்லாமல் ஓட்டுப்போடும் நிலை இருந்து இருந்தால் எங்களுக்கு அதிகஓட்டு கிடைத்திருக்கும் என அவர் கூறினார்.

நேரில் ஆஜராக கேப்டனுக்கு கோர்ட் உத்தரவு:

இதற்கிடையில் முதல்வர் கருணாநிதியை அவதூறு பேசியதாக கூறி திமுக சார்பில் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை எழும்பூர்நீதிமன்றத்தில் மார்ச் 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23ம் தேதி விஜய்காந்த் வீடு உட்பட சில இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். இதற்கு தேமுதிக தொண்டர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்து வருமானவரித் துறையினரின் காரை அடித்து நெறுக்கினர்.

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக அரசியல் நோக்கத்தோடு முதல் அமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதிதான்வருமானவரித் துறையினரின் சோதனைக்கு தூண்டுதலாக இருந்ததார் என விஜயகாந்த் கருத்து கூறினார்.

விஜயகாந்த் கூறிய கருத்து அவதூறானது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி வழக்கு தாக்கல்செய்தார். இந்த வழக்கை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் பூதநாதன் விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கு விசாரணைக்காக 21ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் விஜய்காந்த ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

கோர்டில் விஜய்காந்த ஆஜராகவில்லை. நேற்று மட்டும் நீதிமன்றத்தில் விஜய்காந்த் ஆஜராகத் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டு இருப்பதாக விஜய்காந்த் தரப்பில் கூறப்பட்டது.

இதைதொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்தார். மேலும் அன்றைய தினம் விஜய்காந்த் நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மாநகராட்சி மறுதேர்தல் கேப்டன் அறிக்கை:

இதற்கிடையில் சென்னை மாநகராட்சி மறுதேர்தலில், மக்கள் சக்தியை மட்டும நம்பி, அக்னிப் பரீட்சையில் நின்று வென்றுள்ளோம் என்றுவிஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தை காப்பாற்றவே மாநகராட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது.

மக்கள் சக்தி ஒன்றை மட்டும் நம்பி, அக்னி பரிட்சையில் இறங்கினோம். எங்கள் கட்சி பல இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. ஆனால்நாங்கள் பெற்ற வாக்குகள் அனைத்தும் மக்கள் அளித்த நல்ல வாக்குகள். தனித்து போட்டியிட்ட தேமுதிக 2வது இடம் பெற்று குறைந்த வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

5 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருப்பது, நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது என்பதைநிருபித்துக் காட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST