Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

நீலாங்கரை கடற்கரையில் தொடரும் குடி-கும்மாளம், 4 பேர் கைது

Published: Sunday, November 18, 2007, 14:22 [IST]


சென்னை: நீலாங்கரை கடற்கரையில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட 4 கபடி வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

வார இறுதி நாட்களில் நீலாங்கரை கடலோரப் பகுதிகளில் குடி-கும்மாளம் நடந்து வருவதாகவும், பல சட்ட விரோத செயல்களும் நடப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந் நிலையில் துரைபாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் லாயிட் சந்திரா தலைமையிலான போலீசார் நீலாங்கரை பகுதியில் நேற்றிரவு தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.

அப்போது பாலவாக்கம் கடற்கரை பகுதியில் 4 பேர் குடித்துவிட்டு ஆபாசமாக ஆடிக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் நால்வரும் கபடி வீரர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள சவுக்கு மரங்களுக்கிடையே சில ஜோடிகள் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களை போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தனர். அதில் பீகாரை சேர்ந்த பெண் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவரும் சிக்கினார்.

அவர்களை கடுமையாக எச்சரித்த போலீசார் அவர்களை விடுவித்தனர்.

மேலும் நீலங்கரை பகுதியில் உள்ள பண்ணை வீடுகளிலும் விடுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter