பட்ஜெட்-வெளிநாடு வாழ் தமிழர் அறக்கட்டளை

வியாழக்கிழமை, மார்ச் 20, 2008, 15:19 [IST]
சென்னை: வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தங்களது நன்கொடைகளோடு, அரசின் உதவியைப் பெற்று தங்களது சொந்த ஊரில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் தமிழக அரசு புதிய அறக்கட்டளையை தொடங்கவுள்ளது.

நிதியமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதி்ல், கூறப்பட்டுள்ளதாவது:

வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் பலரும், தமது சொந்த ஊர் மற்றும் அங்குள்ள மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களுக்கு உதவிட விரும்புகின்றனர்.

இவர்களின் நன்கொடை மூலமாக அவர்கள் மேற்கொள்ள விரும்பும் பணிகளை செயல்படுத்l பொது அறக்கட்டளை உருவாக்கப்படும்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தம் ஊரில் தாம் செய்ய விரும்பும் பணிகளைக் குறிப்பிட்டு, அதற்கான நன்கொடையை இந்த அறக்கட்டளையிடம் அளிக்கலாம்.

இதன் மூலமாக, நன்கொடையாளர்களின் பெயர் பொறிக்கப்பட்டு அப் பணிகளை அரசே செயல்படுத்தும்.

இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள இணைய தள வசதியும் செய்யப்படும்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST