கு.க. விளம்பரத்தில் ராமதாஸ் படம்: பாமக கொந்தளிப்பு

புதன்கிழமை, மார்ச் 26, 2008, 11:25 [IST]
ராமநாதபுரம்: "நான் செஞ்சுக்கிட்டேன்! நீங்க எப்போ'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்பது போன்ற டயலாக்குடன் அவரது படத்தைப் போட்டு தமிழக அரசின் குடும்பக் கட்டுப்பாடு விளம்பரம் வெளியானதால் பாமகவினர் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதற்காக தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பிரசார வாகனம் வலம் வந்தது.

இந்த வாகனத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைப்பாகை அணிந்திருப்பதுபோல் படம் அச்சிடப்பட்ட விளம்பரபேனர் கட்டப்பட்டு இருந்தது. அந்த பேனரில், "நான் செஞ்சுக்கிட்டேன்! நீங்க எப்போ'' என்று டாக்டர் ராமதாஸ் கூறுவதுபோல் வாசகமும் இடம் பெற்றிருந்தது.

இந்த பிரச்சார வாகனம் நேற்று மாலை ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே வந்தது. அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பாமகவினர் பிரசார ஊர்தியில் தங்கள் கட்சி தலைவர் படம் இடம் பெற்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அந்த வாகனத்தை மறித்து ராமதாஸ் படத்தை அதிலிருந்து அகற்றுமாறு கோரினர்.

வேனில் இருந்தவர்கள் இதற்கு மறுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி மாவட்ட கலெக்டர் கிர்லோஷ் குமாரிடம் பா.ம.க. நிர்வாகிகள் புகார் செய்ததைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படத்தை சுகாதாரத் துறையினர் அப்புறப்படுத்தினர்.

ஆனால் பிரச்னையை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்த பாமகவினர் சர்ச்சைக்குரிய அந்த விளம்பர பேனரை படம் எடுத்து கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இனி இந்த விவகாரத்தை தலைமை கையில் எடுக்கப் போகிறது.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST