தசாவதாரத்தை எதிர்த்து வழக்கு

செவ்வாய்க்கிழமை, மே 6, 2008, 16:22 [IST]
சென்னை: தசாவதாரம் படத்தில் சைவ, வைணவ மதங்களுக்கு இடையே மோதல் மூளும் வகையில் காட்சிகள் உள்ளன. எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாகையைச் சேர்ந்த இந்து அமைப்பு ஒன்று இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தசாவதாரம் படத்தில் சைவ, வைணவ மதங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் காட்சிகள் உள்ளன. இப்படத்தால் பிரச்சினை ஏற்படும். எனவே படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த  மனு விடுமுறைக்கால நீதிபதிகள் ராஜசூர்யா, சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், தணிக்கைக் குழு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST