Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பவானிசாகர் அணையில் புகுந்த யானை கூட்டம்

Published: Tuesday, June 3, 2008, 12:01 [IST]

சத்தியமங்கலம்: பவானிசாகர் மின் உற்பத்தி நிலைய வளாகத்துக்குள் யானைகள் கூட்டம் புகுந்து அட்டூழியம் செய்தன. பொது மக்களும் வனத்துறையினரும் சுமார் 7 மணி நேரம் போராடி யானைகள் காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப் பகுதியையொட்டி உள்ளது விளாமுண்டி கிராமம். சில காலத்துக்கு முன் பவானி ஆற்றில் நீர் வரத்து குறைந்தபோது 12 யானைகள், ஆற்றைக் கடந்து விளாமுண்டி வனப் பகுதிக்குள் புகுந்தன.

பின்னர் ஆற்றில் தண்ணீர் அதிகமானதால் அவை காட்டுக்கு திரும்பாமல் அங்கேயே சுற்றி வந்தன.

இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் 11 யானைகள் பவானிசாகர் அணையின் கீழ்பகுதியில் புகுந்தன. பின்னர் மின் உற்பத்தி நிலைய மெயின் கேட் அருகே வந்து நின்றன.

இதை கண்டு அதிர்ந்த மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் வனத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்தது ஏராளமான பொது மக்களும் அங்கு கூடிவிட்டனர்.  பொதுமக்கள் போட்ட கூச்சலால் யானைகள் மிரட்டு அங்குமிங்கும் ஓடின. இதையடுத்து பெரும் களேபரம் நிலவியது.

இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட முன்றனர். சுமார் 7 மணி நேரம் யானைகள் அங்குமிங்குமாக ஓடி, இறுதியில் வனப் பகுதிக்குள் நுழைந்தன.

பொது மக்களும், வனத்துறை ஊழியர்களும் தொடர்ந்து வனப்பகுதிக்குள் ளும் யானைகளை விரட்டிச் சென்றனர். நீண்ட தூரம் அவரை காட்டுக்குள் சென்ற பி்ன்னரே அவர்கள் நிம்மதியடைந்து திரும்பினர்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST