உலகெங்கும் இன்று தசாவதாரம் ரிலீஸ் ஆனது.

வெள்ளிக்கிழமை, ஜூன் 13, 2008, 9:50 [IST]
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள பிரமாண்டப் படமான தசாவதாரம் இன்று ரிலீஸானது.

ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள தசாவதாரம் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. ஒரு நடிகர் 10 வேடங்களில் நடித்திருப்பது உலக சினிமாவில் இதுவே முதல் முறை.

இதுவரை இந்த சாதனையை வைத்திருந்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் மட்டுமே. நவராத்திரியில் அவர் 9 வேடங்களில் நடித்திருந்தார். கமல்ஹாசன் தற்போது அந்த சாதனையை முறியடிக்கிறார்.

இதேபோல ஹாலிவுட்டைச் சேர்ந்த அலெக் கின்னஸ் என்பவர் 40களின் பின்பு வந்த கைண்ட் ஹார்ட்ஸ் அன்ட் கொரோனட்ஸ் என்ற படத்தில் 8 வேடம் போட்டிருந்தார்.

இத்தனை சாதனைகளையும் கமல்ஹாசன் முறியடித்து புதிய உலக சாதனை படைத்து, உலக நாயகன் என்பதை நிரூபித்துள்ளார்.

தசாவதாரம் படத்திற்காக 1000 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளன. ஏற்கனவே படத்தின் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னையில் தசாவதாரம் படம் 21 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதுவும் ஒரு புதிய சாதனை. இதற்கு முன்பு சிவாஜிதான் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தற்போது அதை தசாவதாரம் முறியடிக்கிறது.

அனைத்து தியேட்டர்களிலும் திருவிழாக்கோலமாக காணப்படுகிறது. இந்தத் தியேட்டர்களில் ஒரு நாளைக்கு 165 காட்சிகள் காட்டப்படவுள்ளன. அதில், மாயாஜால் வளாகத்தில் மட்டும் மொத்தம் 45 காட்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்கிடையே, தசாவதாரம் படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்யச் செல்லும் ரசிகர்களுக்கு, அடுத்த 3 நாட்களுக்கு டிக்கெட் கிடையாது என்ற பதிலைத் தருகின்றன தியேட்டர்கள்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST