Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஓகனேக்கல் குடிநீர்த் திட்டம் கட்டாயம் நிறைவேறும்: கருணாநிதி

Published: Monday, July 14, 2008, 18:46 [IST]

Tn Will Implement Hogenakkal Project At All Cost

சென்னை:  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கண்டிப்பாக நிறைவேறும். என்ன விலையானாலும் அதை நிறைவேற்றுவோம் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டப் பணிகள் முடங்கியிருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி இன்று கேள்வி - பதில் பாணி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

நீண்ட காலமாககிடப்பில் போடப்பட்டிருந்த ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி அருகே அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தினசரிகளில் வெளியாகியுள்ளன.

ஆலோசகரை நியமிக்க தமிழக அரசு டென்டர்விட்டுள்ளது. மேலும் திட்டத்ைத எப்படியெல்லாம் நிறைவேற்றப் போகிறோம் என்ற விரிவான கால அட்டவணையையும் மே மாதமே அரசுவெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு இந்தத் திட்டம் நிறைவேற்ற தனது கட்சிதான் காரணம் என்றும், அது முடக்கப்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும் பாமக நிறுவனர் கூறியுள்ளார். இது நல்லதல்ல.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தமிழக அரசு ஜப்பான் வரை சென்று நிதி திரட்டியது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி நமக்கு நிதியுதவி அளிக்க ஒப்புக் கொண்டது.எனவே இந்தத் திட்டத்தை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST