Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

நாகர்கோவில்-நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்

Published: Saturday, August 30, 2008, 12:24 [IST]

சென்னை: கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் சென்னையில் இருந்து நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (எண். 0603) எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (0604) நெல்லையில் இருந்து நாளை இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

அதே போல், சென்னையில் இருந்து நெல்லைக்கு 1, 2ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (0607, 0617) எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

மறுமார்க்கம், 2, 3ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் (0608, 0618) இயக்கப்படுகிறது. இவை நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எழும்பூரை சென்றடையும்.

நாகர்கோவிலுக்கு...

அதே போல சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0605) எழும்பூரில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.