Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

விப்ரோ எந்தத் தவறும் செய்யவில்லை-பிரேம்ஜி

Published: Tuesday, January 13, 2009, 16:55 [IST]

 Azim Premji Letter Wipro Staff World Bank

டெல்லி: 2001ம் ஆண்டில் தனது அமெரிக்க பங்குகளை Directed Share Programme திட்டத்தின் கீழ் வாங்க உலக வங்கி ஊழியர்களுக்கு விப்ரோ வாய்ப்பு தந்தது. ஆனால், இதை 2007ம் ஆண்டில் உலக வங்கி பிரச்சனையாக்கியது.

தனது நிறுவன பங்குகளை சந்தேகத்துக்கிடமான முறையில் உலக வங்கி ஊழியர்களுக்கு விப்ரோ விற்றதாகக் கூறி விப்ரோவுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது. இதன்படி வரும் 2011 வரை விப்ரோவுக்கு எந்த ஆர்டரும் உலக வங்கியிடமிருந்து கிடைக்காது.

வங்கியுடன் தொழில்ரீதியில் வர்த்தகம் செய்துகொண்டே வங்கி ஊழியர்களை தனிப்பட்ட முறையில் விப்ரோ 'கவனித்ததாகவும்', இது முறைகேடானது, நாணயமற்றது என்றும் உலக வங்கி குற்றம் சாட்டியது.

ஏற்கனவே சத்யமும் இப்படித்தான் உலக வங்கியின் ஆர்டரை பெறுவதற்கான அதன் சில அதிகாரிகளுக்கு பங்குகளை ஒதுக்கித் தந்து 'கவனிப்பு' செய்து, கண்டனத்துக்கு உள்ளாகி, இதைத் தொடர்ந்து வெளியே வந்த திகைப்பூட்டும் விவரங்களால் சிக்கலில் மாட்டிக் கொண்டது.

இந் நிலையில் தனது 1 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி இன்று ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளார். அதி்ல்,

நமது நிறுவனம் எந்த அதர்மான செயலிலும் ஈடுபடவில்லை. உலக வங்கியின் ஊழியர்களுக்கு சலுகைகள் செய்து கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. சட்டரீதியாகவும், தொழில் தர்மத்தி்ன் அடிப்படையிலும் விப்ரோ எந்தத் தவறும் செய்யவில்லை. எதைச் செய்தோமோ அதை சரியாகவே செய்துள்ளோம்.

தொழிலரீதியில் நாம் மிக உயர்ந்த பண்புகளை கட்டிக் காத்து வருகிறோம்.

Direct Share Programme- திட்டத்தின்படி பங்குகளை வாங்கியுள்ள அனைவருமே, இது தாங்கள் பணியாற்றும் நிறுவன விதிகளை மீறி வாங்கவில்லை என்ற படிவத்தில் கையெழுத்திட்டுத் தந்துள்ளனர் என்று கூறியுள்ளார் பிரேம்ஜி.

உலக வங்கித் தடையால் எங்களுக்கு எந்த நஷ்டமும் கிடையாது என நேற்று விப்ரோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter