Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பிப். 12ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்

Published: Friday, January 16, 2009, 10:13 [IST]

டெல்லி: நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 12ம் தேதி கூடுகிறது.

லோக்சபாவுக்கு ஏப்ரல் - மே மாத கால கட்டத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அதற்கு முன்பாக நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படுகிறது. அதன்படி பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடுவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு நடைபெறக் கூடும். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தேர்தலுக்கு முன்பு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்தான் நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் புயலைக் கிளப்ப காத்துள்ளதால் இந்தக் கூட்டத் தொடரும் 'வழக்கம் போல' அமளி துமளியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST