{image-25-rocket200.jpg tamil.oneindia.in}
கலிபோர்னியா: புவியில் கார்பன் டை ஆக்ஸைடு அளவை கணக்கிட அமெரிக்கா அனுப்பிய செயற்கைக் கோள் ராக்கெட்டிலிருந்து பிரியாததால் ராக்கெட்டும் செயற்கைக் கோளும் விண்ணிலேயே வெடிக்கச் செய்யப்பட்டு அண்டார்டிக் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
புவியில் கார்பன் டை ஆக்ஸைட் எங்கெங்கு அதிக அளவில் உள்ளது என்பதை ஆராய 'Orbiting Carbon Observatory' (Oco) என்ற செயற்கைக் கோளை கலிபோர்னியாவில் உள்ள வேன்டென்பெர்க் விமானப் படைத் தளத்திலிருந்து டாரஸ் எக்ஸ் எல் ராக்கெட் மூலம் நாஸா செலுத்தியது.
புவியின் வளி மண்டலத்தில் எங்கெல்லாம் கார்டன் டை ஆக்ஸைடு வாயு அதிகமாக உள்ளது, எங்கிருந்து இது அதிகமாக உற்பத்தியாகிறது, பின்னர் இந்த வாயுவின் அளவு எப்படி குறைகிறது என்பதை ஆய்வு செய்ய இருந்தது இந்த செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
புவியில் கார்பன் டை ஆக்ஸைட் எங்கெங்கு அதிக அளவில் உள்ளது என்பதை ஆராய 'Orbiting Carbon Observatory' (Oco) என்ற செயற்கைக் கோளை கலிபோர்னியாவில் உள்ள வேன்டென்பெர்க் விமானப் படைத் தளத்திலிருந்து டாரஸ் எக்ஸ் எல் ராக்கெட் மூலம் நாஸா செலுத்தியது.
Read: In English
ஏவப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட்டிலிருந்து செயற்கைக் கோள் பிரிந்திருக்க வேண்டும். ஆனால், பிரியவில்லை. இதையடுத்து ராக்கெட் அண்டார்டிக் கடலை நோக்கி திருப்பப்பட்டது. பின்னர் விண்ணிலேயே வெடிக்கச் செய்யப்பட்டு செயற்கைக்கோளுடன் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.புவியின் வளி மண்டலத்தில் எங்கெல்லாம் கார்டன் டை ஆக்ஸைடு வாயு அதிகமாக உள்ளது, எங்கிருந்து இது அதிகமாக உற்பத்தியாகிறது, பின்னர் இந்த வாயுவின் அளவு எப்படி குறைகிறது என்பதை ஆய்வு செய்ய இருந்தது இந்த செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத்தக்கது.