ரெபோ ரேட்-ரிவர்ஸ் ரேட் மீண்டும் குறைப்பு!!

வியாழக்கிழமை, மார்ச் 5, 2009, 14:42 [IST]
மும்பை: நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த மீண்டும் ரெபோ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரேட்டைக் குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

நாட்டின் பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் வந்துவிட்டதால் ரிசர்வ் வங்கி மேலும் பல சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கு (ரெபோ) 5.5 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் தற்போது 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு, ரெபோ ரேட் 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  Read:  In English 
அதுபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கான (ரிசர்வ் ரெபோ) வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு 3.5 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டியும் குறைய உள்ளது.

கடந்த 3 மாதங்களில் 5 வது முறையாக ரிசர்வ் வங்கி இந்த வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets