பாஜக கோஷ்டி பூசல்-கூட்டத்தை புறக்கணித்த ஜேட்லி

சனிக்கிழமை, மார்ச் 14, 2009, 13:07 [IST]
டெல்லி: மக்களவைத் தேர்தலையொட்டி பாஜகவில் பூசல் வெடித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் கட்சியின் மூத்த தலைவரான அருண் ஜேட்லி சொன்ன சிலருக்கு பொறுப்பைத் தர கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய தேர்தல் கமிட்டிக் கூட்டத்தை மூத்த தலைவர் அருண் ஜேட்லி புறக்கணித்துவிட்டார்.
  Read:  In English 
டெல்லி, ஆந்திரா, பிகார், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய நேற்று இந்தக் கூட்டம் நடந்தது. ராஜ்நாத் சிங் தலைமையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பங்கேற்ற இந்தக் இந்தக் கூட்டம் நடந்தது.

ஆனால், கூட்டத்துக்கு அருண் ஜேட்லி வரவில்லை. இதையடுத்து நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. ஜேட்லி இல்லாமலேயே 46 வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets