பூஜ்யத்தை நோக்கி பணவீக்கம்!

வியாழக்கிழமை, மார்ச் 26, 2009, 14:31 [IST]
டெல்லி: நாட்டின் பணவீக்கம் கிட்டத்தட்ட பூஜ்யத்தை நெருங்கிவிட்டது.
  Read:  In English 
முன்பே சொன்னதுபோல நுகர்வோருக்குத் தொடர்பில்லாத பணவீக்க விவரங்கள் இவை.

மொத்த வியாபாரிகள், உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே ஆதாயம் தருகிற விதத்தில் பணவீக்கத்தில் மேலும் சில புள்ளிகள் குறைந்து 0.27 சதவிகிதமாகியுள்ளது.

சர்க்கரை மற்றும் இரும்புப் பொருள்களின் விலை மிகமிக குறைந்துள்ளதால், அநேகமாக அடுத்த வாரம் பூஜ்யத்திலிருக்கும் பணவீக்கம் என்கிறது ராய்ட்டர் செய்தி நிறுவன கணிப்பு.

கடந்த வாரம் 0.44 சதவிகிதமாக இருந்தது பணவீக்கம்.

ரூபாய் மதிப்பு 50.63 ஆக உயர்வு:

இந் நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புபு 50.63 ஆக உயர்ந்துள்ளது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets