பாலகொல்லு-திருப்பதியில் சிரஞ்சீவி மனு தாக்கல்!

சனிக்கிழமை, ஏப்ரல் 4, 2009, 12:19 [IST]
திருப்பதி: பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவரான நடிகர் சிரஞ்சீவி திருப்பதி மற்றும் தனது சொந்த ஊரான பாலகொல்லு ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

நேற்று அவர் பாலகொல்லுவில் வேட்பு மனு தாக்கல் செய்த அவர் இன்று திருப்பதியில் அவர் மனு தாக்கல் செய்தார்.

தனது வேட்பு மனுவில் தனக்கும் தனது மனைவி சுரேகாவுக்கும் ரூ.88 கோடி அளவுக்கே சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் சென்னையில் உள்ள பல சொத்துக்களும் அடங்கும்.

சென்னை அண்ணாசாலையில் செஞ்சுரி பிளாசாவில் ஒரு கடையும், அண்ணாமலை டெம்பிள் டவர்சில் 1,200 சதுர அடி பரப்பளவுள்ள ஷோரூமும் உள்ளதாகவும் இதன் மதிப்பு ரூ. 3.5 கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள நிலமும், கிருஷ்ணா கார்டனில் ரூ.2 கோடி மதிப்புள்ள வீடும், சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் ரூ.6 கோடி மதிப்புள்ள கட்டிடமும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  Read:  In English 
ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டின் மதிப்பை ரூ.14.36 கோடி என்று கூறியுள்ளார். ஆனால், பல்லாயியிரம் அடி பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மதிப்பு சொல்லப்பட்டதைவிட பல மடங்கு அதிகமாகும்.

ஆந்திரா, தமிழ்நாடு தவிர பெங்களூரிலும் வணிக வளாகங்கள், புற நகரில் விவசாய நிலங்கள் உள்ளதாகவும் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

மொத்தத்தில் தனது பெயரில் ரூ. 30.32 கோடிக்கும் மனைவி சுரேகாவுக்கு ரூ. 48 கோடிக்கும் சொத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST