டெல்லி: இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்திய மக்கள் தாராளமாக உதவ வேண்டும் என பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிபிசிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இந்திய மக்கள் அதற்கு உதவ வேண்டும்.
அப்பாவித் தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. போரில் சிக்கி அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. அவர்களைக் காக்க வேண்டியது நமது கடமை.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது எனக்கு சிறிதளவே அனுதாபம் உண்டு. எடுத்துக் கொள்ளும் கடமைக்கும், அதை வழிநடத்தி செயல்படுத்துவதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. அந்த வேறுபாடுதான் ஒருவரை தீவிரவாதியா, இல்லையா என்பதை முடிவு செய்யும் என்றார் பிரியங்கா.





















