Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சச்சின்: 'வயசு 36-நெனப்பு 16'!

Published: Friday, April 24, 2009, 15:01 [IST]

 At 36 Tendulkar Feels Like 16

டர்பன்: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36வது வயது பிறந்தது. இருப்பினும் இன்னும் 16 வயது தெம்புடன் தான் இருப்பதாக சச்சின் கூறியுள்ளார்.

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் ஆன டான் பிராட்மனுக்குப் பின்னர் மிகச் சிறந்த வீரராக கருதப்படுபவர் சச்சின்.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில், மும்பை அணியின் கேப்டனாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இன்று சச்சினுக்கு 36வது பிறந்த நாள். இதையடுத்து தனது மும்பை இந்தியன்ஸ் அணி வீரரர்களோடு சேர்ந்து அவர் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார்.

பின்னர் சச்சின் கூறுகையில், 16 வயது பையனாகத்தான் நான் இப்போதும் உணர்கிறேன். வருடா வருடம் வாழ்த்துக்கள் மட்டுமே கூடி வருவதாக நினைத்துக் கொள்கிறேன்.

சாதனைகளை முறியடிப்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. போட்டிகளில் வெல்வதுதான் எனக்கு முக்கியம். வெற்றி பெற்றவுடன் கிடைக்கும் உணர்வு மிகவும் அற்புதமானது.

ஒரு அணியை வெல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு முன், டெஸ்ட் போட்டிகளில் நான் எடுத்த 12,000 ரன்களும், ஒரு நாள் போட்டிகளில் எடுத்த 16,000 ரன்களும் மிகச் சாதாரணம் என்றார் சச்சின்.

சச்சின் தனது 16வது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter