Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

'ஈழம்':இன்று கறுப்புக் கொடி போராட்டம்-நெடுமாறன்

Published: Friday, April 24, 2009, 11:58 [IST]

சென்னை: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து இன்று கறுப்புகொடி போராட்டம் நடத்தப்போவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் பாதுகாப்பு வளையப்பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த படுகொலையை இந்திய அரசு தடுத்து நிறுத்தாததை கண்டித்தும், பலியான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இன்று தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், தோழர்களும் கலந்து பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

மாலை 4 மணிமுதல் 6 மணிவரை ஊர்வலம் நடத்துங்கள். சரியாக 6 மணிக்கு போக்குவரத்தை நிறுத்தி 5 நிமிடம் அமைதியாக அனைவரும் கூடி அஞ்சலி செலுத்துங்கள். வீடுகளில் இருப்போர் வீட்டுக்குள் இருந்தபடி அஞ்சலி செலுத்துங்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Mumbai Indians: 62 / 3, 9 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 33 / 0, 8 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST