ரூ.9 கோடி நிதி மோசடி-அபினவ் பி்ந்த்ராவின் தந்தை கைது

வெள்ளிக்கிழமை, மே 15, 2009, 12:55 [IST]
சண்டிகர்: ஒலிம்பிக் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வாங்கித் தந்த பெருமைக்குரிய துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவின் தந்தை, ஏ.எஸ்.பிந்த்ரா, பல்வேறு வங்கிகளில் ரூ. 9 கோடி கடன் வாங்கி அதில் நிதி முறை கேடு செய்ததாக கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு சீனாவில் நடந்த பீஜிங் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவை சேர்ந்த அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இவரது தந்தை ஏ.எஸ் பிந்த்ரா சொந்தமாக சண்டிகர் அருகே பண்ணை வீடு ஒன்று உள்ளது.

அவர் பஞ்சாப் மீட்ஸ் லிமிட் என்ற நிறுவனத்தை துவக்க போவதாக கூறி பல்வேறு வங்கிகளில் ரூ. 9 கோடி கடன் வாங்கியுள்ளார். ஆனால், அந்த கடன் தொகையை அவர் இன்று வரை செலுத்தவில்லை.

இதையடுத்து 2006 மற்றும் 2007ம் ஆண்டு அவர் மீது ஆப்பிள் பினான்ஸ் மற்றும் இன்டஸ்இன்ட் வங்கிகள் டெல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தன, அதன் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் பிந்த்ராவுக்கு கடந்த 11ம் தேதி ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்டை பிறப்பித்தது.

இதையடுத்து நேற்று டெல்லி போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
  Read:  In English 
இதுகுறித்து மொஹாலி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ஏஎஸ் பிந்த்ரா கைது செய்யப்பட்டவுடன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன. அவர் விசாரணைக்காக நாளை டெல்லி அழைத்து செல்லப்படுவார் என்றார் அவர்.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets