Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தமிழர்களுக்கு சம உரிமை-யுஎஸ் வலியுறுத்தல்

Published: Wednesday, May 20, 2009, 12:45 [IST]

 Tamils Sinhalese Must Share Power

வாஷிங்டன்: இலங்கையில் ராணுவ ரீதியாக தற்போது இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டாலும் கூட தமிழர்களுக்கும், சிங்களருக்கும் சம அதிகாரம் கிடைக்கும் வகையில் உரிய அதிகாரப்பகிர்வை இலங்கை அரசு மேற்கொண்டால் மட்டுமே அங்கு அமைதி நீடிக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் மூலமாக போரினால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்ததால் ஏற்பட்டுள்ள வடுக்கள் ஆறும் வாய்ப்பு உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மையிலேயே தீவிரவாதத்தை வெல்ல வேண்டுமானால், போரினால் ஏற்பட்டுள்ள வடுக்கள் மறைய வேண்டுமானால், சிறந்த ஜனநாயக நாடாக, ஒருங்கிணைந்த நாடாக, சகிப்புத்தன்மை மிக்க நாடாக இலங்கை உருவாக வேண்டுமானால், அங்கு தமிழர்கள், சிங்களர்கள் மற்றும் பிற இனத்தவருக்கிடையே சம அதிகாரங்கள் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

இலங்கையில் அமைதி நீடிக்க வேண்டுமானால் சிங்களர்களும், தமிழர்களும் சம அதிகாரம் கொண்ட மக்களாக மாற வேண்டும். அப்போதுதான் போரினால் ஏற்பட்ட காயம் மாறி, இலங்கையில் அமைதி நீடிக்கும், அங்கு வளர்ச்சி பெருகும்.

அனைத்து இலங்கை மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். யார் மீதும் பாகுபாடு காட்டக் கூடாது.

சண்டை அங்கு முடிவுக்கு வந்துள்ளதை அமெரிக்கா வரவேற்கிறது. இருப்பினும் ஆயிரக்கணக்கான இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளைப் பெறாத நிலையில் உள்ளது கவலை தருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST