மும்பை: 2009ம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இன்போஸிஸ் நிறுவனத்தின் லாபம் 17.2 சதவீதம் அதிகரித்து ரூ. 1,527 கோடியைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் லாபம் ரூ. 1,302 கோடியாக இருந்தது.
அதே நேரத்தில் கடந்த காலாண்டுடன் (ஜனவரி-மார்ச்) ஒப்பிடுகையில் நிறுவனத்தின் லாபம் 5.33 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த காலாண்டில் லாபம் ரூ. 1,613 கோடியாக இருந்தது.
பங்குச் சந்தையில் இன்று தாக்கல் செய்த தனது காலாண்டு வரவு-செலவு அறிக்கையில் இன்போஸிஸ் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.
இந்தக் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 12.73 சதவீதம் அதிகரித்து ரூ. 5,472 கோடியைத் தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ. 4,647 கோடியாக இருந்தது.
கடந்த 3 மாதத்தி்ல் இன்போஸிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 27 புதிய நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களைப் பெற்றுள்ளன.
நேற்று மாலை ரூ. 1,677 ஆக இருந்த இன்போஸிஸ் பங்கின் விலை இன்று காலை ரூ. 1,735 ஆனது.
அதே நேரத்தில் கடந்த காலாண்டுடன் (ஜனவரி-மார்ச்) ஒப்பிடுகையில் நிறுவனத்தின் லாபம் 5.33 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த காலாண்டில் லாபம் ரூ. 1,613 கோடியாக இருந்தது.
பங்குச் சந்தையில் இன்று தாக்கல் செய்த தனது காலாண்டு வரவு-செலவு அறிக்கையில் இன்போஸிஸ் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.
இந்தக் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 12.73 சதவீதம் அதிகரித்து ரூ. 5,472 கோடியைத் தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ. 4,647 கோடியாக இருந்தது.
கடந்த 3 மாதத்தி்ல் இன்போஸிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 27 புதிய நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களைப் பெற்றுள்ளன.
Read: In English
இன்போஸிஸ் நிறுவனத்தி்ன் இந்த அறிவிப்பையடுத்து பங்குச் சந்தையில் அதன் பங்குகள் விலை 3.5 சதவீதம் அவுக்கு உயர்ந்துள்ளது.நேற்று மாலை ரூ. 1,677 ஆக இருந்த இன்போஸிஸ் பங்கின் விலை இன்று காலை ரூ. 1,735 ஆனது.